#BREAKING திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் ஸ்டாலின்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 3, 2021, 12:17 PM IST
Highlights

திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஒரு பக்கம் கொரோனா தொற்றும் வேகமெடுத்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ், வேளச்சேரி தொகுதி வேட்பாளரான சந்தோஷ் பாபு,  சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவரா, விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர் அமமுக வேட்பாளர் குரு, திமுகவை பொறுத்தவரை குறிஞ்சிபாடி தொகுதி வேட்பாளர் பன்னீர்செல்வம், அம்பத்தூர் வேட்பாளர் ஜோசப் சாமுவேல், பாபநாசம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மமக தலைவருமான ஜவாஹிருல்லா ஆகியோருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், சமீபத்தில் தொற்றின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்  திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக  மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் கனிமொழிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நேற்று கூட சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜாவை ஆதரித்து தென்காசியிலும், விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. செள.தங்காபாண்டியனை ஆதரித்தும், ஆலங்குளம் வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவை ஆதரித்தும் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!