உதயநிதி பரம்பரையே (தாத்தா, அப்பா, மகன் ) playboy தான்... அமைச்சர் ஜெயக்குமார் மரண கலாய்..!

Published : Aug 12, 2020, 03:10 PM IST
உதயநிதி பரம்பரையே (தாத்தா, அப்பா, மகன் ) playboy தான்... அமைச்சர் ஜெயக்குமார் மரண கலாய்..!

சுருக்கம்

அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் உதயநிதி இருவரும் மாறி மாறி Chocolate Boy, Play Boy விமர்சித்து வருவது தமிழக அரசியல் களம் விறுவிறுப்பை எட்டி வருகிறது.

அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் உதயநிதி இருவரும் மாறி மாறி Chocolate Boy, Play Boy விமர்சித்து வருவது தமிழக அரசியல் களம் விறுவிறுப்பை எட்டி வருகிறது.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வகித்து வந்த சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவி காலியானதால், அங்கே பொறுப்பாளராக கட்சியின் சீனியர் ஒருவரை நியமிக்க வேண்டுமென கட்சியின் சீனியர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.  ஆனால், சீனியர்கள் கோரிக்கையைப் புறக்கணித்துவிட்டு மேற்கு மாவட்ட பொறுப்பாளராக, உதயநிதிக்கு நெருக்கமான இளைஞரணி சிற்றரசு நியமிக்கப்பட்டார். 

இதனால், அதிர்ச்சியடைந்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணையபோவதாக தகவல்கள் வெளியானதையடுத்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில்,  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து பேசுகையில், சாக்லேட் கொடுத்து எம்.எல்.ஏ கு.க.செல்வத்தை ஏமாற்றி இருக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எம்எல்ஏ கு.க. செல்வத்தை சாக்லேட் கொடுத்து ஏமாற்றியதாக கூறியவர் ஒரு சாக்லேட்பாய் என உதயநிதி ஸ்டாலினை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின் 'சாக்லேட்பாய் என்பது ஒன்றும் பெரிய தவறான விஷயம் அல்ல. ஆனால், சாக்லேட்பாய் என சொன்னவர் பிளேபாய் என கலாய்த்திருந்தார். 

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரிடம் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நீங்கள் சாக்லேட்பாய் என்று சொன்னதற்கு பிளேபாய் என்று கூறியிருந்தார் ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் நான் அவரை சுவீட்டாக சாக்லேட்பாய் என்று தான் கூறி இருந்தேன். ஆனால், அவர் என்னை பிளேபாய் என்று கூறிவிட்டார். அவர் மட்டுமல்ல அவர் தாத்தா, அப்பா, அவரது பரம்பரையே பிளேபாய் தான் என்று கிண்டல் செய்தார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!