பழனிசாமியே என்றும் முதல்வர் என்பது கட்சியின் கருத்து அல்ல.. ராஜேந்திரபாலாஜியை நோஸ்கட் பண்ணிய ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Aug 12, 2020, 2:17 PM IST
Highlights

பாஜக தலைமையில்தான் கூட்டணி என்ற கருத்தை அதன் மாநிலத் தலைவர் முருகன் கூறவில்லை. பாஜக தலைமையில்தான் கூட்டணி என அதன் மாநிலத் தலைவர் முருகன் கூறினால் உரிய பதிலை அதிமுக தெரிவிக்கும். 

முதல்வர் வேட்பாளர் தொடர்பாக கட்சி எடுக்கும் முடிவில் நாம் கருத்து கூற முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி அதிமுகவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் என ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- எடப்பாடியே முதல்வர் என்ற ராஜேந்திரபாலாஜியின் கருத்து அதிமுகவின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. முதல்வர் வேட்பாளர் குறித்து தற்போது கருத்து கூறுவது கட்சியை பலவீனப்படுத்தும். பொதுக்குழு, செயற்குழு எடுக்கும் முடிவுதான் கட்சியை இவ்வளவு நாள் காப்பாற்றி வருகிறது. 

தனிப்பட்ட ஒருவரின் கருத்தை கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. இது தொடர்பாக யாரும் கருத்து கூறாமல் இருந்தால் நல்லது. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எல்லாம் சுமுகமாக முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு என்று கூறியுள்ளார். 

மேலும், பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார் பாஜக தலைமையில்தான் கூட்டணி என்ற கருத்தை அதன் மாநிலத் தலைவர் முருகன் கூறவில்லை. பாஜக தலைமையில்தான் கூட்டணி என அதன் மாநிலத் தலைவர் முருகன் கூறினால் உரிய பதிலை அதிமுக தெரிவிக்கும். கூட்டணி பற்றி தமிழக பாஜக தலைவர் முருகன் கருத்து கூறிய பிறகே அதிமுக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

click me!