கஜா பாதித்த மக்களுக்கு 25000 தென்னங்கன்றுகளை வழங்கி அசத்திய உதயநிதி..! மக்கள் முகத்தில் மகிழ்ச்சி..!

Published : Dec 21, 2018, 03:41 PM IST
கஜா பாதித்த மக்களுக்கு 25000  தென்னங்கன்றுகளை வழங்கி அசத்திய  உதயநிதி..!  மக்கள்  முகத்தில் மகிழ்ச்சி..!

சுருக்கம்

கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களுக்கு தேவையான உதவிகளை கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின், இலவச மரக்கன்றுகளை வழங்கி உள்ளார்   

கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களுக்கு தேவையான உதவிகளை  கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின், இலவச மரக்கன்றுகளை வழங்கி உள்ளார் 

கடந்த மாதம் ஏற்பட்ட கஜா புயலால் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டம் பெரும் சேதத்தை சந்தித்தது. இதன் விளைவாக... ௮ந்த பகுதிகளில் இருந்த பெரும்பாலான தென்னை மரங்கள் முதல் விவசாய பயிர்கள் வரை அழிந்துவிட்டது.

அப்போது உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக, நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கினார். அதன்பின், தென்னை மரங்களை இழந்து வாடும் மக்களின் துயரத்தை கேட்டறிந்த உதயநிதி, 50 கிராமங்களுக்கு சுமார் "25000” தென்னங்கன்றுகளை வழங்கி உள்ளார்.

ஏற்கனவே திமுக சார்பில் பல கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை திமுக  தலைவர் ஸ்டாலின் சென்னையிலிருந்து லாரி லாரியாய் அனுப்பி வைத்தார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார். அடுத்தகட்டமாக, அவர்களுக்கு தேவையான மரக்கன்றுகளை இன்று இலவசமாக வழங்கினார்.

உதயநிதியின்  இந்த உதவிக்கு மக்கள் பெரும் பாராட்டையும்  நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் 
போது உதயநிதியின் நெருங்கிய நண்பரும் சட்ட மன்ற உறுப்பினருமான  அன்பில் மகேஸ் உடன் இருந்தார்.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி