ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை...தி.மு.க நிர்வாகியை கண்டித்து உதயநிதி நியாயம் கேட்பாரா?

Published : Jul 03, 2020, 02:06 PM IST
ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை...தி.மு.க நிர்வாகியை கண்டித்து உதயநிதி நியாயம் கேட்பாரா?

சுருக்கம்

ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்து பெண்ணை கொலை செய்த செய்யூர் பகுதி தி.மு.க இளைஞரணி செயலாளர் தலைமறைவாகி விட்டார். இந்தச்சம்பவத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி நியாயம் கேட்பாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே நைனார் குப்பத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதுடன் கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட தி.மு.க இளைஞரணி செயலாளரார் தேவேந்திரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து, பாலியல் தொல்லைக்கு இணங்காததால் படுகொலை செய்த தி.மு.க இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், மற்ற சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து நொடிக்கொரு அறிக்கை என ஸ்டாலினும், மணிக்கொடு ட்விட் செய்து விமர்சனம் செய்யும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் இந்த விவகாரத்திற்காக வாய் திறக்கவில்லை. ஆகையால், உதயநிதி தலைமையிலான தி.மு.க இளைஞரணியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு யார் நீதி பெற்று தருவார்? என அபலரும் நியாயம் கேட்டு வருகின்றனர். மற்றவர்களுக்கு இரு நியாயம், தங்களது கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஒரு நியாயமா எனவும் அவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். 

இதுகுறித்து திமுக தலைமை மவுனம் கலையுமா? வாய் திறப்பாரா உதயநிதி ஸ்டாலின்...?

PREV
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!