பத்தவச்சிட்டியே தினா! போர்க்கொடி தூக்க ஆரம்பிக்கும் கூடங்குள வாசிகள்!

 
Published : Jan 10, 2018, 12:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
பத்தவச்சிட்டியே தினா! போர்க்கொடி தூக்க ஆரம்பிக்கும் கூடங்குள வாசிகள்!

சுருக்கம்

Udayakumar pressmeet

போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டாம் என்றும், மக்கள் கருத்துக்களை கேட்காமல் குமரி சரக்கு பெட்டக முனை திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்வதாகவும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.

சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன், முதல் நாள் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் கலந்து கொண்டார். இதன் பின்னர், டிடிவி தினகரன்  செய்தியாளர்களிடம் பேசும்போது, விஷன் 2023 என்று ஆளுநர் உரையில் கூறியுள்ளனர். அரசு மிஷினே செயல்படாதபோது விஷன் எப்படி செயல்படுத்துவார்கள் என்று கேள்வி எழுப்பினார். கூடங்குளத்தில் அணு உலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் அணு உலைகளைக் கட்டக் கூடாது என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை, சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றார். மக்கள் கருத்துக்களைக் கேட்காமல் குமரி சரக்கு பெட்டக முனை திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். குமரி சரக்கு பெட்டக முனையம் அமைப்பதில் அவசரம் காட்டக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டாம் என்றும் குமரி சரக்கு பெட்டக முனையம் அமைப்பதில் அவசரம் காட்டக் கூடாது என்றும் உதயகுமார் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு