உச்சா, கக்காவுக்காக ரெய்டின் போது வெளியே வந்த இருவர்! யார் அவர்கள்? ஐ.டி. ரெய்டில் ச்ச்ச்ச்சீ மொமண்ட்ஸ்!

Asianet News Tamil  
Published : Nov 15, 2017, 09:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
உச்சா, கக்காவுக்காக ரெய்டின் போது வெளியே வந்த இருவர்! யார் அவர்கள்? ஐ.டி. ரெய்டில் ச்ச்ச்ச்சீ மொமண்ட்ஸ்!

சுருக்கம்

Two who came out during Reid period

இந்த ஐ.டி. ரெய்டு மூலம் சிலரது ஐடெண்டிபிகேஷன்கள் விலாவாரியாக வெளியே தெரிந்திருக்கின்றன. அவர்களுள் இளவரசியின் மகன் விவேக்கும் ஒருவர். இந்த ரெய்டுக்குப் பின் தான் விவேக்கின் ஆதி அந்தங்கள் பெரிதாக அலசப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில் ரெய்டின் போது விவேக்கின் வீட்டில் நிகழ்ந்த சில சுவாரஸ்யங்கள்:

*    விவேக் வாங்கிய கார்கள், அவர் வெளி மாநிலங்களில் செய்த முதலீடுகள், கடந்த நவம்பர் 8-க்கு பின் அவரது பிஸ்னஸ் மூவ்மெண்ட்ஸ் இவற்றை பற்றித்தான் அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.

*    2006-ல் ஜெயலலிதா பெருமதிப்புள்ள சொத்து ஒன்றை வாங்கியதாகவும், அது பற்றி விவேக்கிற்கு என்ன தெரியும் என கேட்டார்களாம். இது பற்றி நான்கு விதமான கேள்விகளை நான்கு நாட்களும் கேட்டார்களாம்.

*    ஐ.டி. விவேக் வீட்டினுள் நுழைந்தபோது அவரது மைத்துனர் பிரபுவும் அங்கே இருந்திருக்கிறார். ‘எனக்கும் இந்த சோதனைக்கும் சம்பந்தமில்லை, நான் கிளம்பவா?’ என்று அவர் பரிதாபமாய் கேட்க, ‘ஜாஸ் சினிமாவை மேற்பார்வை செய்வதே நீங்கள்தான். அதனால் உட்காருங்கள்.’ என்று அமுக்கியிருக்கிறார்கள். 

*    விவேக் தன் வீட்டில் ரிச் பிரீடு நாய்கள் ரெண்டு வளர்க்கிறார். அவை மட்டும்தான் உச்சா, கக்காவுக்காக வீட்டை விட்டு வெளியே அழைத்து செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன. துவக்கத்தில் இதற்கும் ஐ.டி. துறையினர் அனுமதிக்கவில்லையாம். வழக்கமாக அவை மேற்படி இயற்கை உபாதைகளுக்காக வெளியே செல்லும் நேரம் வந்ததும் பவ்வவ் என்று அவை கத்த துவங்க, இனி அனுமதிக்காவிட்டால் பாவம் அவற்றுக்கு சிக்கலாகிவிடும் என்று மனமிரங்கி ஓ.கே. செய்திருக்கிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி..? கடந்த முறை 6, இம்முறை 10 சீட் கேட்கும் சிபிஎம்..?
மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. இபிஎஸ் பக்கம் சாய்ந்த வெல்லமண்டி நடராஜன்!