ஆளுநரின் பாதுகாப்பு கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்...!

 
Published : Dec 15, 2017, 05:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
ஆளுநரின் பாதுகாப்பு கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்...!

சுருக்கம்

Two people die in the governors security car

கடலூரில் ஆய்வு செய்ய சென்ற ஆளுநர் பன்வாரிலால் காரில் சென்னை திரும்பியபோது அதிவேகத்தில் வந்த பாதுகாப்பு படையினரின் கார் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம்டைந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோகித், சமீபத்தில் கோயம்புத்தூரில் நேரடியாக பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் கோவை மாவட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டமும் நடத்தினார். இதனால் தமிழக எதிர்கட்சிகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதைதொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, திமுகவினர், ஆய்வுக்கு வரும் கவர்னருக்கு கடலூர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்பாட்டம் செய்து எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம் என அறிவித்தனர்.

அதனபடி இன்று கடலூரில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் புரோஹித்துக்கு எதிராக திமுகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து ஆளுநர் ஆய்வு செய்யும் இடங்களை திட்டமிட்டுவைத்திருந்த பிளான் மாறி போனது. 

தொடர்ந்து வண்டிப்பாளையம், அம்பேத்கர் நகர் முதலான பகுதிகளுக்கு ஆளுநர் சென்றார். அம்பேத்நகரின் தெருக்களுக்குள் செல்லும் போது, வீட்டு வாசலில் உள்ள கீற்று மறைப்புக்குள் இருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள சென்றார். 

ஆனால் அது குளியலறை என தெரியாமல் வந்த ஆளுநரை கண்டு அங்கு குளித்து கொண்டிருந்த இளம்பெண் பதறிப்போனார். இதையடுத்து ஆளுநரும் அதிகாரிகளும் அங்கிருந்து நகர்ந்தனர். 

இதையடுத்து ஆய்வை முடித்து கொண்டு ஆளுநர் பன்வாரிலால் காரில் சென்னை திரும்பினார்.  அவர் காருக்கு முன்னும் பின்னும் ஏராளமான பாதுக்காப்பு படையினர் காரில் பயணம் செய்தனர். 

இந்நிலையில், மாமல்லபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது பாதுகாப்பு படையினரின் கார் மோதியதில் சாலையை கடக்க முயன்றவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். 
 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!