மதுரையில் ஜனவரி 12ல் பொங்கல் விழாவில் பிரதமர் கலந்து கொள்வார் என தகவல் வெளியான நிலையில் இது குறித்து விருதுநகர் காங் எம். பி மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வருகிற ஜனவரி 12 ம்தேதி மதுரையில் பொங்கல் விழா நடைபெற உள்ளதாகவும் அவ்விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும் பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலையின் லெட்டர் பேடில் வந்துள்ள அறிக்கையை மதியழகன் என்கிற பத்திரிகையாளர் பதிவு செய்துள்ளார்.
அதற்கு ரீட்விட் செய்துள்ளார் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மார்கழியில் பொங்கலா ?, ஜனவரி 14 ஆம் நாள் தை மாதம் முதல் நாள் தான் பொங்கல் விழாவை உண்மை தமிழன் கொண்டாடுவான் … ஆனால்.. கொடுமை இந்த சங்கிகள் பொங்கலை கூட மோடி பெயரில் கொண்டாடும் அவலம்? … ஆண்டின் கடைசிநாளும் கொடுமையா திரு அண்ணாமலை…
இது நியாமா நவராத்திரிக்கு முன் குஜராத்தில் 3 நாட்களுக்கு முன் விழா நடக்குமா ?அதுவும் மோடி பெயரில் நவராத்திரி ? விஐயதசமி 14 ம்தேதி அன்று மோடி பெயரில் நடக்குமா விழா நாக்பூரில் ? பின் ஏன் இந்த அவமதிப்பு தமிழர்களின் விழாவிற்கு . மார்கழியில் இசை விழா நடத்துங்கள் வரவேற்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.