ஆசை இருக்கலாம்... வெறி இருக்கக்கூடாது... செந்தில்பாலாஜியை கிழித்துதொங்கவிட்ட டிடிவி..!

Published : May 05, 2019, 12:59 PM IST
ஆசை இருக்கலாம்... வெறி இருக்கக்கூடாது... செந்தில்பாலாஜியை கிழித்துதொங்கவிட்ட டிடிவி..!

சுருக்கம்

முதல்வர் பதவியில் இருந்துகொண்டு பிரதமர் மோடிக்கு பயந்து எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி நடத்திக்கொண்ருக்கிறார் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

முதல்வர் பதவியில் இருந்துகொண்டு பிரதமர் மோடிக்கு பயந்து எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி நடத்திக்கொண்ருக்கிறார் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

 

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர், சாகுல் அமீதை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசுகையில்;- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் நலன்களை எல்லாம் பிரதமர் மோடியிடம் அடகு வைத்துவிட்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொங்கு மண்டல விவசாயிகள் உயர் மின் கோபுரம் வேண்டாம் என்கிறார். ஆனால் இவற்றையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் அமைச்சர் தங்கமணி ஜாலியாக இருந்து வருகிறார். 

நேற்று முன்தினம் வரை நம்முடன் இருந்து விட்டு, இன்று திமுக கட்சி சென்றுவிட்டு தற்போது செந்தில் பாலாஜி வேட்பாளராகியுள்ளார். திமுக ஒரு தீய சக்தி என்பதால் அப்போதே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் எதிர்த்து வந்தனர். இந்த இயக்கத்தில் எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராக இருந்து விட்டு, இன்று திடீரென்று திமுக கட்சிக்கு செல்வதாக இருந்தால் என்ன காரணமாக இருக்கும். பதவி ஆசை இருக்கலாம். ஆனால் பதவி வெறி இருக்கக் கூடாது என செந்தில்பாலாஜி கடுமையாக சாடினார். 

என்னை சந்திக்கும் மக்களெல்லாம் செந்தில் பாலாஜிக்கு நேற்று இன்று நாளை என்று பெயர் வைத்துள்ளனர். துரோகத்தை கொள்கையாக கொண்டுள்ள செந்தில்பாலாஜியை எம்.எல்.ஏ.வாக ஆக்கினால் தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை இருக்காது என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!