இனி அதுவரை தேர்தலில் போட்டியிடவே மாட்டோம்... டி.டி.வி. தினகரன் சபதம்..!

Published : Jul 11, 2019, 03:42 PM ISTUpdated : Jul 11, 2019, 03:47 PM IST
இனி அதுவரை தேர்தலில் போட்டியிடவே மாட்டோம்...  டி.டி.வி. தினகரன் சபதம்..!

சுருக்கம்

அங்கீகாரம் பெற்ற கட்சி சின்னம் கிடைத்த பிறகே தேர்தலில் அமமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

அங்கீகாரம் பெற்ற கட்சி சின்னம் கிடைத்த பிறகே தேர்தலில் அமமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "கட்சி பதிவு செய்யும் முயற்சியில் இருப்பதால் தான் தேர்தலில் போட்டியிடவில்லை. அங்கீகாரம் பெற்ற கட்சி சின்னம் கிடைத்த பின்புதான் தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

எங்களது தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதியான வேராக என்னுடன் இருக்கின்றனர். உடனடியாக எம்.எல்.ஏ. பதவி கிடைக்கும் என்று நினைத்து வந்தவர்கள் தான் எங்களைப் பிரிந்து சென்றுள்ளனர். மற்ற மாநிலங்களில் நடக்கும் பிரச்சனைகளில் பாஜகவின் தலையீடு உள்ளது. தமிழக அரசு தண்ணீர் பிரச்சனையை சரியாக கையாளவில்லை என்றும் குற்றம்சாட்டினார். 

மேலும், அவர் பேசுகையில் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக பேசினாலே அமைச்சர்கள் கோபப்படுகிறார்கள். குடிநீர் விஷயத்தை அரசு கவனமாக கையாண்டு தட்டுபாட்டை போக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்களவை தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்காததால் தான் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டோம். ஆகையால், வேலூர் மக்களவை தேர்தல் மற்றும் 2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. அங்கீகாரம் பெற்ற சின்னம் கட்சிக்குக் கிடைத்த பிறகு தேர்தலில் போட்டியிடுவோம் என்று தினகரன் கூறினார். 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!