
இன்று காலை முதல் தினகரன் வீடு உட்பட , சசிகலாவின் குடும்பத்தினர் வீடு, ஜெயா டிவி அலுவலகம் ஆகிய 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன், தன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறவில்லை எனக் கூறினார். மேலும் தனக்கு சொந்தமாக புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில்தான் சோதனை செய்ய அதிகாரிகள் சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்த ரெய்டு யதேச்சையாக நடக்கவில்லை என்றும், நானும் சின்னமாவும் அரசியலில் இருக்கக் கூடாது என நடத்தப்படும் சதி என கூறினார்.
டி.டி.வி தினகரன் அளித்த பேட்டி ...