
ஒரு நாள் ஓய்வு எடுத்து செல்லவே புதுச்சேரி வந்துள்ளோம் எனவும், டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்னும் அதிகரிப்பார்கள் எனவும் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் புதுச்சேரியில் பேட்டி அளித்துள்ளார்.
பிளவுபட்ட அதிமுக அணிகள், நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நேற்று இணைந்தன. இந்த இணைப்புக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவியும், மாஃபா. பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டன.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் பதவிக்காக இணைந்தது என்று குற்றம் சாட்டிய டிடிவி அணியினர் 19 பேர், நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று தனித்தனியாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர்.
இதையடுத்து டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்க்ள் 19 பேரும் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனால் மீண்டும் ஒரு கூவத்தூர் உருவாவது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.
மேலும், இந்நிலையில், புதுச்சேரியில் செய்தியாளரகளை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன், ஒரு நாள் ஓய்வு எடுத்து செல்லவே புதுச்சேரி வந்துள்ளோம் எனவும், டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்னும் அதிகரிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் எதுவும் வெளிப்படையாக சொல்ல முடியாது எனவும், தெரிவித்தார்.