டி.டி.வியா..? அதிமுகவா..? கமல் எடுத்த தைரியமான முடிவு..!

Published : Feb 18, 2019, 04:59 PM IST
டி.டி.வியா..? அதிமுகவா..? கமல் எடுத்த தைரியமான முடிவு..!

சுருக்கம்

திமுகவை கடுமையாக விமர்சித்து வருவதால் கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன் அணியுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்த்த நிலையில் அதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் கமல். 

திமுகவை கடுமையாக விமர்சித்து வருவதால் கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன் அணியுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்த்த நிலையில் அதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் கமல்.

 
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பேசிய அவர், ‘தமிழகம் என்னும் குழந்தை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதை யாரும் தட்டிக் கொடுக்கவும் இல்லை. கொஞ்சவும் இல்லை. ரத்தம் வந்தால் அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும், உடனடியாக அறுவை சிகிச்சைக்காக செல்லமுடியாது. சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் இறந்துள்ளனர்.

உங்களது பெற்றோர் உங்களை ராணுவத்துக்குச் செல்ல வேண்டாம் என்றால், அவர்களிடம் சொல்லுங்கள், ராணுவத்தில் உயிர் இழப்பவர்களைவிட தமிழகத்தில் சாலை விபத்தில் உயிர் இழப்பவர்கள்தான் அதிகம். ராணுவ வீரர்கள் இறப்பதற்குதான் ராணுவத்துக்கு வருகிறார்கள் என்கிறார்கள். ராணுவ வீரர்கள் சாக வேண்டும் என்ற அவசியமில்லை. இரண்டு நாட்டின் தலைவர்களும் அமர்ந்து பேசினால், ராணுவ வீரர்கள் உயிரிழக்க வேண்டிய தில்லை.

இந்த ஓராண்டில் எதை எதை செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொண்டேன். அரசியலில் என்ன செய்யக்கூடாது என்பதை எனக்கு முன்பாக அரசியலில் உள்ளவர்கள் கற்றுக்கொடுத்தனர். பொதுஅறிவு கூட இல்லாதவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள். கூட்டணி என்னும் கறுப்புக் குட்டைக்குள் எனது புது காலணியை அழுக்காக்க விரும்பவில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது தமிழகத்தை பாதிக்கும். கட்சியைத் தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்வது முறையல்ல.

கிராம சபைக் கூட்டம் என்று இருப்பது உங்களுக்குத் தெரியாதா. நேற்று வந்த பையனைப் பார்த்து காப்பி அடிக்க வெட்கமாக இல்லையா?. தி.மு.கவை கடுமையாக விமர்சிக்க, தி.மு.கவே காரணம், மறைமுகமாக அல்ல நேரடியாக விமர்சிப்பேன். கூட்டணியில் இடம்பெற முடியாத தால் தி.மு.கவை விமர்சிக்கவில்லை.

டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதாக வரும் தகவல்கள் மற்றவர்களுக்கு வேண்டுமானால் நல்ல தகவலாக இருக்கலாம். எனக்கு அல்ல’’ எனக் கூறினார். இதன் மூலம் வரும் மக்களவை தேர்தலில் தனித்து களமிறங்கி போட்டியிட தயாராகி விட்டார் கமல். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!