முதல்வர் பதவி ஆசை காட்டும் தினா... குழப்பத்தில் செங்ஸ்... சதுரங்க வேட்டை பட பாணியில் பலே வியூகம்....

 
Published : Jan 17, 2018, 04:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
முதல்வர் பதவி ஆசை காட்டும் தினா... குழப்பத்தில் செங்ஸ்... சதுரங்க வேட்டை பட பாணியில் பலே வியூகம்....

சுருக்கம்

TTV dinakarans target sengottaiyan for cm seat

ஜெயலலிதா மறைவிற்குப்பின் பாண்டியராஜனின் பள்ளி கல்வி துறை அமைச்சர் பதவி, மதுசூதனனின் அவைத்தலைவர் பதவி, பன்னீர் தற்போது வசிக்கும் அவை முன்னவர் பதவியென வைத்திருந்த செங்கோட்டையன். எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைப்புக்குப் பிறகு அவர் அடுத்தடுத்து பறிகொடுத்தது இந்த மூன்றை மட்டுமல்ல. கைவசம் வைத்திருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையும் கூடத்தான்.

சசிகலாவின் விசுவாசமாக இருந்த செங்கோட்டையன் மதுசூதனனுக்கு அவைத்தலைவர் பதவியையும், சமீபத்தில், சட்டசபை அவை முன்னவர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்காக பறிகொடுத்தது பரிதாபமானது. 


கடந்த சில நாட்களாக செங்கோட்டையனிடம் இருந்த பதவிகளை தொடர்ந்து பறித்துக் கொண்டிருக்கும் வேலையில், எடப்படிக்கு முன் முதல்வர் பதவியை செங்கோட்டையனுக்குத் தருவதாக இருந்தது ஆனால் சில காரணங்களால் அது எடப்பாடிக்கே கொடுக்கப்பட்டது என அதிரிபுதிரி கிளப்பினார் தினகரன். ‘கடக ராசியில் பிறந்த செங்கோட்டையனுக்கு, சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு அரசியலில் ஏறுமுகம்தான்’ என்று ஜோதிடர்கள் சொல்லிவந்த நிலையில், இப்போது செங்கோட்டையனை வைத்து அரசியல் செய்கிறது தினகரன் அணி. புதுக்கட்சி தொடங்குவதாக இருந்த தினகரன் சசிகலா உடனான சந்திப்புக்குப்பின் எடப்பாடி அரசை எப்படியாவது  கவிழ்த்துவிட்டுச் செங்கோட்டையனை முதல்வராக்கி, அதிமுகவை தன் தலைமையின்கீழ் கொண்டுவர திவிரமாக களத்தில் குதித்துள்ளார்.

தினகரனின் மனநிலை என்னவாம்? ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் கட்சி வருவதற்கு முன்பிலிருந்தே அ.தி.மு.க-வில் செங்கோட்டையன்தான் செம மாஸ் மினிஸ்டர் தேர்தல் பிரச்சார சாரதி என பெயரெடுத்தவர். ‘ஜெயலலிதாவின் சாரதி’என இருந்தவர் செங்கோட்டையன். ஜெயலலிதா பிரச்சாரம் பண்ண ஸ்கெட்ச் போட்டு தருவது என செம பிஸிமேன், ஜெயலலிதாவே பிரச்னைக்குரிய தொகுதி எதுவென்று தேர்ந்தெடுத்து, அதன் தேர்தல் பொறுப்பைச் செங்கோட்டையனிடம்தான் ஒப்படைப்பார்.  எம்.ஜி.ஆர் மறைந்தபோது ஜா. அணி, ஜெ. அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. அப்போதும் ஜெ.வுடன் இருந்தவர், எந்த துறையாக இருந்தாலும் அதில் தனியாக தெரிபவர். இப்படி ஜெயா அமைச்சரவையில் எப்போதுமே இருந்த செங்கோட்டையன் கடைசியாக எந்த பதவியையும் கொடுக்காமல் இருந்தார். சீனியர் என்ற முறையில் அவரை கவுரவிக்க அவைத்தலைவர், அமைச்சர் பதவியென கொடுத்துவைத்தோம் ஆனால் எடப்பாடியும் பன்னீரும் சேர்ந்து விட்டு ஏன் அவரை ஒதுக்குகிறார்கள் எனத் தெரியவில்லை. இது எனக்கு வருத்தமளிக்கிறது’’ வருத்தபட்டாராம் தினகரன்.

ஆமைத்தலையர் ஜெயகுமார், இடிச்சபுளி எடப்பாடி என அமைச்சர் முதல்வரை கலாய்த்தாலும் அந்த அணியில் இருக்கும் செங்கோட்டையனை பாராட்டி பேசுவார் தினகரன். தினகரனின் பாராட்டை பெற்றுவந்த செங்கோட்டையனை தொடர்ந்து புகழ்ந்து தள்ளும் தினகரன். அதிமுகவை கைப்பற்ற துடிக்கும் தினகரன், செங்கோட்டையனைத் தன் பக்கம் இழுக்கத் தினகரன் சதி வலை செய்துவருகிறார்.

சசிகலா சிறைக்குச் செல்லும்முன், ‘யாரை முதல்வராக நியமிக்கலாம்’ என்கிற பேச்சு வந்தபோது, செங்கோட்டையன் பெயரை அவர் முன்மொழிந்ததாகச் சொல்கிறார்கள். கூவத்தூரில் நடந்த நள்ளிரவு பாலிடிக்ஸில் செங்கோட்டையனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார். 



இவ்வளவு விசுவாசமான செங்கோட்டையனை ஜெயலலிதா கொஞ்சகாலம் விலக்கி வைத்திருந்தார். காரணம், அவரின் நடத்தை பற்றி ஜெயலலிதாவிடம் அவருடைய குடும்பத்தினர் நேரில் புகார் கூறினர். நண்பர் ஒருவருக்காகச் செங்கோட்டையன் விதிகளை மீறி உதவினார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. இதையடுத்து, அமைச்சரவை யிலிருந்தே செங்கோட்டையனை நீக்கினார் ஜெயலலிதா. இப்போது, செங்கோட்டையன் இடம்பெற்றி ருப்பது காலத்தின் கட்டாயம். ஆனால், முன்பு சசிகலாதான்.

அரசியல் எதிரியாக இருந்த சசிகலா குடும்பத்தினரின் ‘குட் புக்’கில் செங்கோட்டையனுக்கு ஒரு இடம் கிடைத்தது எப்படி? 

செங்கோட்டையனுக்குப்பின் கட்சிக்குள் என்ட்ரி கொடுத்த ஓ.பன்னீர்செல்வத்தைக் கட்சியில் வளர்த்துவிட நினைத்த சசிகலா, செங்கோட்டையனை பற்றி ஒருவித வெறுப்பை உருவாக்கியது சசி குடும்பம். ஜெயலலிதா மறைவிற்குப் பின் பன்னீர் பிரிந்து போது புதிதாக அமைச்சரவை அமைக்கப்பட்டபோது, செங்கோட்டையனுக்காக மாஃபா பாண்டியராஜன் வைத்திருந்த பள்ளிக்கல்வித் துறை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சசிகலா ஜெயிலுக்கு போனதும் தினகரன் கட்சியை தன்வசம் வைத்திருந்த சமயத்தில் இரட்டை இலைக்காக லஞ்சம் கொடுத்ததாக கைதாகி திகாருக்கு போன கேப்பில் எடப்பாடியும் – பன்னீரும் இனைந்து சசி குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டனர். இதனால் கோபம் கொண்ட தினகரனோ கட்சியில் இருக்கு பெரும் தலைகளை தன் பக்கம் இழுக்க படாத பாடு பட்டுவரும் வேலையில், எடப்பாடி பன்னீர் அணியே அவருக்கு ஒரு வழியை காட்டிவிட்டது. அது என்னன்னா? செங்கோட்டையனின் பதவிகள் பறிப்பு தான் அது, இந்த சமயத்தில் ‘செங்கோட்டையனைப் பிரித்தால், கொங்கு மண்டல அ.தி.மு.க-வினர் பிளவுபட்டுவிடுவார்கள்’ என கணக்கு போடுகிறார். முதலில் ஒருவனை எமாற்றனும்னா அவன் ஆசையை தூண்டனும் என்ற சதுரங்க வேட்டை பட பாணியில் செங்கோட்டையனை முதல்வர் பதவி ஆசை காட்டி தன்பக்கம் இழுத்து விட்டு ஓரிரு மாதங்கள் செங்கோட்டையனை முதல்வர் பதவியில் உட்கார வைத்துவிட்டு, பிறகு அவரை ஒதுக்கி விட்டு முதல்வராக அமர்த்தி பிறகு ஜெயா பாணியில் பியூஸ் புடிங்கி டம்மியாக்குவது தான் தினாவின் திட்டமாம்.

இந்நிலையில், செங்கோட்டையனுக்குத் தூது விட்டிருக்கிறார் தினகரன். ஆனால் செங்கோட்டையனோ நான் நேரத்துக்குத் தகுந்தமாதிரி மாறும் பச்சோந்தியாக இருக்கமாட்டேன். மன்னார்குடி குடும்பத்தின் அடிமையாக இருக்க விரும்பல. இங்கு நான் கௌரவமாக, சந்தோஷமாக இருக்கிறேன். இதுவே எனக்குப் போதும். இதுதான் என் முடிவு. இனி என்னிடம் யாரும் தூது வராதீர்கள் துரத்தி அனுப்பிவிட்டாராம்.

ஆனாலும் தன் முயற்சியை நிறுத்தாத, தினகரன் செங்கோட்டையனை விடுவதாக இல்லை, மேலும் சென்கொட்டையனைப்போல பல எம்.எல்.ஏ-க்களையும் தங்கள் பக்கம் வசப்படுத்த தினகரன் தீயா வேலை பார்த்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!