அப்படி என்னதான் கோபமோ... யாராலும் ஸ்டாலினை இப்படி அசிங்கப்படுத்த முடியாது... கிழித்து தொங்கவிட்ட தினகரன்

Published : Jan 08, 2019, 09:43 PM IST
அப்படி என்னதான் கோபமோ... யாராலும் ஸ்டாலினை இப்படி அசிங்கப்படுத்த முடியாது... கிழித்து தொங்கவிட்ட தினகரன்

சுருக்கம்

எப்போதுமே கூலாக நெத்தியடி அடிப்பதிலும், ஷார்ப்பா பதிலடி கொடுப்பதிலும் வல்லவரான தினகரன் திமுக தலைவர் ஸ்டாலின் மீது  கொல காண்டில் இருப்பது தெளிவாகவே தெரிகிறது.

தனது வலதுகையாகவும், மூலையாகவும் செயல்பட்ட செந்தில் பாலாஜியை திமுகவிற்கு தட்டி தூக்கியதில் தொடங்கி, திருவாரூர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்கும் அதே நேரத்தில் தேர்தலுக்கு தடை வாங்க ஒரு டீமை உசுப்பி விட்டதால் கடுப்பில் இருக்கிறார் தினகரன்.

ஆமாம், இதுவரை எந்த அரசியல் தலைவரும் இப்படி ஸ்டாலினை விமர்சிக்காத அளவிற்கு சுயநலப் புலி, யோக்கியர் யென தாறுமாறாக திட்டியிருக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில், கட்சியை, மக்களைக்காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று எவனாவது சொன்னால் நம்பாதே, அவனது இன்றைய நிலையை ஆராய்ந்து பார்,அவன் தியாகியா அல்லது தகுதியைத்தாண்டிய செல்வந்தனா என்பது புரியும். அதிலும் தன் குடும்பம்,பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அவன் சுயநலப் புலிதான் என்றார் பெரியார். பதிவிட்டுள்ளார்.

அதுத்த பதிவில், திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்த பாரம்பரியத்திலிருந்து வந்து, இன்றைக்கு ஆசியப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்டாலின் தான் அந்த சுயநலப் புலி!

அடுத்தது, லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால் உருவான பல நூறு கோடி மதிப்புள்ள முரசொலி அறக்கட்டளைக்கு தனது மகனை அறங்காவலராக நியமித்த யோக்கியர் ஸ்டாலினைப் பற்றித்தான் 55 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இப்படிச் சொன்னார் போலும். என கூறியுள்ளார்.

அடுத்து, லட்சம் கோடி மதிப்பிலான 2ஜி ஊழல் வழக்கில் தனது தங்கையை, தாயை சிறைக்கும் விசாரணைக்கும் அனுப்பி வைத்த இந்த சுயநலப்புலிதான் இன்று மற்றவர்களின் தரம் பற்றி பேசுகிறது. என ஒருமையில் பேசியுள்ளார்.

கடைசியாக, பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் அரா மீனைப் போல, தேர்தலுக்கான கூட்டணிக்கு காங்கிரஸ்; தேர்தலுக்குப் பிறகான கூட்டணிக்கு பி.ஜே.பி. என வேஷமிடும் அரா மீன் ஸ்டாலின், அயிரை மீனைப் பார்த்து பயந்து பதுங்குவது ஏன்..? என தாறுமாறாகக் கிழித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!