மோடியை அலற வைப்பதில் ஸ்டாலினை விட தினகரன் தான் கெத்து... தளபதியை வம்புக்கிழுத்து பேசியது யார்?

By Vishnu PriyaFirst Published Mar 7, 2019, 4:15 PM IST
Highlights

தன்னை சிறுபான்மையின மக்களின் நண்பனாகவும், காவலனாகவும் காட்டிக் கொள்வதுதான் தி.மு.க.வின் நெடுநாள் பழக்கம். இதை ’சிறுபான்மையினரின் வாக்கு வங்கி தன்னை விட்டு நகராது இருக்க தி.மு.க. போடும் வேஷம்.’என்று பொதுவான விமர்சனத்தின் மூலம் தாக்குவார்கள் எதிர்கட்சியினர். 

தன்னை சிறுபான்மையின மக்களின் நண்பனாகவும், காவலனாகவும் காட்டிக் கொள்வதுதான் தி.மு.க.வின் நெடுநாள் பழக்கம். இதை ’சிறுபான்மையினரின் வாக்கு வங்கி தன்னை விட்டு நகராது இருக்க தி.மு.க. போடும் வேஷம்.’என்று பொதுவான விமர்சனத்தின் மூலம் தாக்குவார்கள் எதிர்கட்சியினர். 

இப்போதும் கூட ‘மதவாத பி.ஜே.பி.யையும், அதன் கூட்டணி கட்சிகளையும் வேரறுப்போம்.’ என்று சொல்லித்தான் சிறுபான்மை வாக்கு வங்கியை தன் வளையத்தினுள்ளேயே வைத்துள்ளது தி.மு.க. கூடவே இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு சீட்டும் கொடுத்துள்ளது. ஆனால் ஸ்டாலினுக்கே ஷாக் தரும் வகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியானது தினகரனின் அ.ம.மு.க.வுடன் கூட்டணியை அறிவித்துள்ளது. கூட்டு வைத்ததோடு மட்டுமில்லாமல் ஸ்டாலினை தாக்கியும் பேச துவங்கியிருப்பது தி.மு.க.வுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

 

ஸ்டாலினுக்கு வேட்டு வைத்துப் பேசும் இக்கட்சியின் மாநில தலைவரான முபாரக் “தமிழகத்தை ஆண்ட இரண்டு பெரும் தலைவர்களும் இல்லாத நிலையில், மதவாத மற்றும் பாசிச பி.ஜே.பி.க்கு எதிரான நிலைப்பாடு எனும் புள்ளியில் தினகரனும், நாங்களும் ஒன்றாய் சந்திக்கிறோம். அ.தி.மு.க.வின் அதிருப்தி அணியாக மட்டுமே அ.ம.மு.க.வை ஒரு வட்டத்தினுள் அடக்கிவிட முடியாது.

தினகரனுக்கென்று மிக மிகப்பெரிய தொண்டர் ஆதரவு மற்றும் மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அவரது வெற்றியை எந்த அணியாலும் தடுத்து நிறுத்தவோ, பாதிக்க செய்யவோ முடியாது. ஒரு உண்மையை சொல்வதென்றால், பாசிச பி.ஜே.பி.யை சமரசமேயில்லாமல் வலுவாக எதிர்ப்பதில் தி.மு.க.வின் அணியைவிட தினகரனின் அ.ம.மு.க. பெட்டராக இருக்கிறது.” என்று சொல்லியுள்ளார். 

மதவாத எதிர்ப்பு! எனும் போர்டை கையில் பிடித்துக் கொண்டு, ஒட்டுமொத்த சிறுபான்மை வாக்குவங்கியையும் அரவணைக்கும் முயற்சியில் இருக்கும் தி.மு.க.வுக்கு, தமிழக இஸ்லாமிய அரசியலமைப்புகளில் முக்கியமான எஸ்.டி.பி.ஐ. இப்படி ‘மோடியை அலற வைப்பதில் ஸ்டாலினை விட தினகரன் பெட்டர்!’ என்று வெளிப்படையான கருத்தை தெறிக்க விட்டிருப்பது பெரும் தர்மசங்கத்தை தந்துள்ளது! எஸ்.டி.பி.ஐ.யின் இந்த நிலைப்பாடு மற்ற இஸ்லாமிய அரசியலமைப்புகளின் மனதிலும் மாற்றத்தை உருவாக்கிட முயன்று, தேர்தல் நேரத்தில் தி.மு.க. அணிக்கு இன்னும் பெரிய இடைஞ்சலை தரலாம்! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். பார்ப்போம்!

click me!