
ஜெயலலிதாவை கொலைக்குற்றவாளி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாக டிடிவி தினகரன் ஆவேசமடைந்து ஸ்டாலினை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சட்டத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவின் படங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை இருந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டி இருக்கும்.
பல இடங்களில் அந்த படங்களை அகற்ற வேண்டும் என்று மக்களின் பிரதிநிதிகள் மட்டுமல்ல பொதுமக்களும் போராட்டம் போன்றவற்றிற்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் இன்று தலைமைச்செயலாளரை சந்தித்து மனு அளித்தோம் அவரும் எங்கள் கோரிக்கையை கூர்ந்து கேட்டார் என்று கூறியிருந்தார்.
அப்போது அவர் ஜெயலலிதாவை கொலைக்குற்றவாளி என்று கூறியதாக கூறி அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆவேச அறிக்கை விட்டுள்ளார்.
உலக தமிழர்களின் உள்ளங்களில் ஈடில்லா புகழ் பெற்றவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மீது அவதூறு பழி போட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. துண்டு சீட்டில் எழுதி பேசுவதை மு.க.ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை கொலைக்குற்றவாளி என கூறி அவர் மீது அவதூறு பரப்பும் மு.க. ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
உள்ளத்தில் நஞ்சும் உதட்டில் இனிமையும் கொண்டவர் மு.க. ஸ்டாலின். துண்டுச் சீட்டு வைத்து பேசும் ஸ்டாலின், ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசுவதை நிறுத்த வேண்டும்.
தமிழர்களின் உள்ளத்தில் இணையில்லாத புகழுடன் இருப்பவர் ஜெயலலிதா. அவரைப் பற்றி ஸ்டாலின் அவதூறாகப் பேசுவதா? என்றும் தினகரன் கடுமையாக சாடியுள்ளார்.
அவரது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தினகரன் கூறியுள்ளார்.