அரசு விழாவுக்கு வந்த அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு… திமுக எம்எல்ஏவின் வேட்டியை அவிழ்த்த பொதுமக்கள்

 
Published : Feb 25, 2017, 05:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
அரசு விழாவுக்கு வந்த அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு… திமுக எம்எல்ஏவின் வேட்டியை அவிழ்த்த பொதுமக்கள்

சுருக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட  திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில்  இலவச சைக்கிள் விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் ஆலங்குடி தொகுதி திமுக எம்எல்ஏ பங்கேற்று மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால்  அமைச்சர் விஜயபாஸ்கர் விழாவில் திடீரென கலந்து கொண்டு சைக்கிள் வழங்க உள்ளதாகவும், திமுக எம்எல்ஏ அங்கு வரக் கூடாது என்று கூறியதாக தகவல் வெளியாகியுது,

இந்த தகவல் பரவியதையடுத்து கடும் கோபமடைந்த  திருவரங்குளம் ஊர் மக்கள், தங்களது தொகுதி எம்எல்ஏவை அவமதிப்பதா என ஆத்திரமடைந்த பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் திமுக எம்எல்ஏ வின் வேட்டி அவிழ்ந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் வருகை எதிர்ப்பு தெரிவித்து தீபா பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து திருவரங்குளத்துக்கு சென்று கொண்டிருந்த அமைச்சரின் காரை உடையனேரி காலனியைச் சேர்ந்த கிராம மக்கள் முற்றுகையிட்டு திரும்பி போகும்படி கூச்சலிட்டனர்.

இப்படி பல கண்டங்களை தாண்டி திருவரங்குளம் சென்ற அமைச்சரை வரவேற்க யாரும் இல்லை.பின்னர் அமைச்சர் மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். அப்போது மாணவர்களின் பெற்றோர்களும் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு