எடப்பாடியுடன் டிடிவி ஆதரவாளர்கள் சந்திப்பு - அடுத்த பரபரப்புக்கு தயாராகும் அதிமுக?

First Published Aug 1, 2017, 3:16 PM IST
Highlights
ttv dinakaran supporters meeting with edappadi


இன்று மாலை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தவிருக்கும் நிலையில், அவரை டிடிவி ஆதரவாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது எடப்பாடி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசை காப்பாற்றி கொள்ள எடப்பாடி பெரிதும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

காரணம், எடப்பாடி தரப்பில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்,எல்.ஏக்களும், ஒ.பி.எஸ் தரப்பினர் கொடுக்கும் டார்ச்சரும் தான்.

எடப்பாடிக்கு எதிராக அவர்கள் தரப்பு எம்.எல்.ஏக்களே டிடிவிக்கு ஆதரவாகவும், தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால் பாஜகவின் சப்போர்ட் எடப்பாடி பழனிசாமிக்கு பலமாக இருக்கிறது என்றே சொல்லலாம். அதாவது அதிமுக தரப்பினர் முழுவதுமாக பாஜக வேட்பாளருக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே குடியரசு தலைவர் போட்டியின்போது டிடிவி ஆதவாளர்களான எம்.எல்.ஏக்கள் டிடிவியை கட்சிக்குள் இணைக்க வேண்டும் என கண்டிசன் போட்டனர்.

ஆனால் எடப்பாடி மழுப்பியதாக தெரிகிறது. இதைதொடர்ந்து பாஜக சசிகலா தரப்பு அணியை ஓரங்கட்ட முடிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இதில் அதிமுகவின் இரு அணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை டிடிவி ஆதரவாளர்களான தங்க தமிழ்செல்வனும், தளவாய் சுந்தரமும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்

click me!