
டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள், தினகரன் இல்லம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று சுயேட்சை வேட்பாளர் தினகரன் முன்னிலை வகித்து வந்தார். இரண்டாம் இடத்தில் அதிமுகவும், மூன்றாவது இடத்தில் திமுகவும் உள்ளன.
இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இதில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் (1) டிடிவி தினகரன் (சுயேச்சை) - 10421, (2) மதுசுதனன் (அதிமுக) - 4521, (3) மருது கணேஷ் (திமுக) - 2623, (4) கலைக்கோட்டுதயம் 267, (5) கரு.நாகராஜன் (பாஜக) 66 வாக்குகளும் பெற்று பெற்றுள்ளனர். இந்த நிலையில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகிப்பதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தை துவக்கி உள்ளனர். 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளநிலையில், தற்போது 2 சுற்றுகள் மட்டுமே முடிந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை, அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.