
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் சேர்ந்து வாங்கியிருக்கும் வாக்குகளை விட 3500 வாக்குகள் அதிகம் பெற்று தினகரன் முன்னிலை வகிக்கிறார்.
கடந்த 21ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்றது. 77.5% வாக்குகள் பதிவாகின. ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சுமார் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை 18633 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. அதில், 10421 வாக்குகளை பெற்று தினகரன் முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 4521 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் 2383 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் சேர்ந்து வாங்கியிருக்கும் வாக்குகளை விட 3517 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். தினகரன்.
தற்போதைய நிலவரப்படி, அதிமுகவும் திமுகவும் இணைந்தே 6904 வாக்குகள் பெற்றுள்ளனர். ஆனால் சுயேட்சையாக களமிறங்கிய தினகரன் 10421 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக, திமுக இணைந்து வாங்கியதைவிட தினகரன் 3517 வாக்குகள் பெற்று அபாரமாக முன்னிலை வகிக்கிறார்.