
கூவத்தூர் பனமழையில் நனைந்த எம்.எல்.ஏக்கள் எடப்பாடியை தேர்வு செய்தனர். அப்போது எடப்பாடி ஆட்சி வந்தால் உங்களுக்கு தேவையானதை அவர் செய்வார் எனவும் வாக்குறுதி அளித்துள்ளனர். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எடபாடிக்கு வாக்கு அளித்தனர்.
இதைதொடர்ந்து கூவதூரில் வாக்களித்தவற்றை எடப்பாடி அரசு செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த எடப்பாடி சில நாட்களுக்கு முன்பு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 8 பேரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து இரட்டை இலை விவகாரத்தில் சிறைக்கு சென்று ஜாமீனில் திரும்பிய தினகரனை அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடிக்கு எதிராக தினகரனிடம் ஆதரவாகும் எம்.எல்.ஏக்கள் பட்டியல் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று வரை 27 ஆக இருந்த எம்.எல்.ஏக்கள் இன்று 31 பேர் தினகரனிடம் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் எடப்பாடி அணி கதி கலங்கி போயுள்ளது. தினகரன் இதுவரை 31 சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்துள்ளனர்.
1:30pm மணிநேர நிலவரப்படி இதுவரை தஞ்சம் அடைந்தவர் பட்டியல் கீழே வருமாறு...
1.பெரம்பூர் வெற்றிவேல்
2.ஆண்டிப்பட்டி தங்கதமிழ்செல்வன்
3.அரூர் முருகன்
4.சாத்தூர் சுப்ரமணியன்
5.கம்பம் ஜக்கையன்
6.பெரியகுளம் கதிர்காமு
7.சோளிங்கர் - பார்த்திபன்
8.நிலக்கோட்டை தங்கதுரை
9.ஆம்பூர் பாலு
10.குடியாத்தம் ஜெயந்தி
11.ராதாபுரம் இன்பதுரை
12.பூந்தமல்லி ஏழுமலை
13.மதுரை வடக்கு ராஜன் செல்லப்பா
14.பரமக்குடி முத்தையா
15.அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி
16.பெருந்துறை தோப்பு வெங்கடாசலம்
17.பழனியப்பன் பாப்பிரெட்டிபட்டி
18.செய்யாறு மோகன்
19.கலசப்பாக்கம் பன்னீர் செல்வம்
20.மானாமதுரை மாரியப்பன் கென்னடி
21.விளாத்திக்குளம் - உமா மகேஸ்வரி
22.ஸ்ரீபெரும்புதூர் - பழனி..
23. சத்யா பண்ணீர்செல்வம் - பண்ருட்டி –
24. சுந்தர்ராஜன் - ஒட்டப்பிடாரம்
25. திருப்போரூர் கோதண்டபாணி
26. ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா
27. பெரம்பலூர் இளம்பை தமிழ்ச்செல்வன்
28.திருப்பரங்குன்றம் போஸ்
29.உசிலம்பெட்டி நீதிபதி.
30.திருத்தனி நரசிம்மன் .
31.மேலூர் பெரியபுள்ளான்.
எடப்பாடி ஆட்சி கவிழும் நிலையில் உள்ளதாகவும், இன்னும் சில எம்.எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.