போலீஸு, சி.பி.ஐ.யெல்லாம் வேலைக்கே ஆவாது! அவர வேற லெவல்லதான் டீல் பண்ணனும்... ஏற்றமிகு எடப்பாடியாரின் பல்ஸை எகிற வைத்த தினகரன்!

By Vishnu PriyaFirst Published Jan 25, 2019, 11:09 AM IST
Highlights

தன்னை மீண்டும் ஓவராக சீண்டி, கொடநாடு விஷயத்தில் தன்னை மறுபடி மறுபடி இழுக்கும் தினகரனை நினைத்து எடப்பாடியாருக்கு பல்ஸ் எகிறியிருக்கிறது.

2ஜி வழக்கில் விடுதலையான கனிமொழி, ராசாவுக்கு வாழ்த்து! காலமான கருணாநிதிக்கு அஞ்சலி! சட்டமன்றத்தில் ஸ்டாலினுக்கு நட்புடன் மரியாதை! என்று...தி.மு.க.விடம் மிக மிக ஜெண்டிலாகத்தான் நடந்து கொண்டிருந்தார் தினகரன். பதிலுக்கு ஸ்டாலினும் தினாவிடம் நட்பு முகம்தான் காட்டிக் கொண்டிருந்தார். 

ஆனால் தினகரனின் வலது கரமாக இருந்த செந்தில்பாலாஜி என்று தி.மு.க.வில் இணைந்தாரோ அன்று துவங்கியது ஸ்டாலினுக்கும், தினகரனுக்கும் இடையிலான யுத்தம். கடுப்பிலிருந்த தினகரன் செந்திலைதான் திட்டினாரே தவிர ஸ்டாலினை ஒன்றும் பெரிதாய் விமர்சிக்கவில்லை. ஆனால் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஸ்டாலினுக்கு, தினகரன் மீது என்ன கோபம் வந்ததோ தெரியவில்லை...’டுவென்டி ருபீஸ், மக்கர் குக்கர்’ என்றெல்லாம் விமர்சித்து, யுத்தத்தை துவக்கி வைத்தார். 

விடுவாரா தினகரன், ஸ்டாலினை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளு வெளுவென வெளுத்தவர், அவரைப்போல் பேசி மிமிக்ரி செய்து ‘நீ! வா! போ!’ என்று ஒருமையில் விளாசித் தள்ளிவிட்டார். ரெண்டு கட்சிகளுக்கும் இடையில் வார்த்தை யுத்தம் சமூக வலைதளங்களில் வெடித்து சிதறியது. அதன் பிறகு தி.மு.க. முக்கியஸ்தர்கள் சிலரே ஸ்டாலின் ‘தளபதி, நாம அவரை சீண்ட வேண்டாம். அவரு நம்மை ஒண்ணும் பண்றதில்லை. நம்ம இலக்கு ஆட்சிதான்.’ என்றனர். 

அதன் பிறகு தினகரனை விமர்சிப்பதை விட்டு நகர்ந்தார் ஸ்டாலின். ஆனாலும் ஸ்டாலினை போட்டுப் பொளந்து கொண்டிருந்த தினகரன் சமீபத்தில் மாறிவிட்டார். ஸ்டாலினை விட்டு நகர்ந்து மீண்டும் எடப்பாடியாரை கையிலெடுத்துவிட்டார் தினா. கொஞ்ச நாளாக தன்னை டார்கெட் செய்யாமல் தினகரன் இருந்ததில் சந்தோஷப்பட்ட எடப்பாடிக்கு இப்போது மீண்டும் ஃபீவர். 

அந்த வகையில் நேற்று கரூரில் மைக் பிடித்த தினகரன் “மூழ்கிப்போகும் கப்பலுங்க அ.தி.மு.க. நாங்க ஏன் அங்கே போய் இணையனும்? இந்த பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க.வோட உண்மையான ரத்தம், சதை, நாடி நரம்பு, உயிர் எல்லாமே நாங்கதான். நாடாளுமன்ற தேர்தல் முடியட்டும் அப்புறம் என்னாகுதுன்னு பாருங்க. அ.தி.மு.க.வுல இருந்து மிக முழுமையாக எங்ககிட்ட வந்து சேருவாங்க. அப்புறம்...இந்த கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி பயப்படுறதை பார்த்தா எங்களுக்கு சந்தேகம் வலுக்குது. 

இந்த விவகாரத்தை தமிழக போலீஸ், சி.பி.ஐ. இவங்களெல்லாம் விசாரிச்சா உண்மை வெளியில் வராது. ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி தலைமையில் கமிஷன் வெச்சு விசாரிக்கணும்.” என்று புள்ளி வைத்தார். தமிழகத்தில் எவ்வளவோ பிரச்னைகளுக்கு ‘கமிஷன் எனும் கண் துடைப்பு’ வைக்கப்பட்டு, அவை நீர்த்துப் போக வைக்கப்பட்டதை தினகரன் அறியாமல் இல்லை. ஆனாலும் இப்படி கேட்டிருப்பது ஆச்சரியம்தான். அதேவேளையில் தன்னை மீண்டும் ஓவராக சீண்டி, கொடநாடு விஷயத்தில் தன்னை மறுபடி மறுபடி இழுக்கும் தினகரனை நினைத்து எடப்பாடியாருக்கு பல்ஸ் எகிறியிருக்கிறது.

click me!