
தொடர்ந்து அரசியலில் தான் இருக்கிறேன் என்றும், சென்னை திரும்பிய உடன் கட்சிப் பணியில் ஈடுபடுவேன் என்றும் டெல்லி திஹார் சிறையில் இருந்த விடுவிக்கப்பட்ட அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. டெல்லியில் பிடிபட்ட பிரபல இடைத்தரகர் சுகேஷ் கொடுத்த தகவல்களைத் தொடர்ந்து டெல்லி போலீசார் டி.டி.வி. தினகரனை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள்.
பிறகு ஏப்ரல் 25-ந் தேதி தினகரன் கைது செய்யப்பட்டார். அவருடன் பணப்பட்டுவாடா செய்ய உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி மனு செய்தனர். அந்த மனுவை விசாரித்த டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட்டு டி.டி.வி. தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து திஹார் சிறையிலிருந்து வெளியே வந்த தினகரம் செய்தியாளர்களுக்கு பேட் அளித்தார்.அப்போது சென்னை திரும்பியவுடன் கட்சிப் பணிகளில் ஈடுபடுவேன் என தெரி/வித்தார். தான் எப்போதும் அரசியல்வாதிதான் என்றும் அவர் கூறினார்.
யாரும் யாருக்கும் பயந்த நடப்பதில்லை என்றும் அனைவருடனும் நட்புடன் இருப்பதையே தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
தன்னை நீகட்சியில் இருந்து நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும்,தன்னை யாரும் கட்சியை விட்டு நீக்கவில்லை என்றும் தினகரன் தெரிவித்தார்.