’கரூரில் காலியாகும் அமமுக... பீஸ் போன டி.டி.வி.தினகரன்...’ கொக்கரிக்கும் அதிமுக!

By manimegalai aFirst Published Dec 15, 2018, 2:10 PM IST
Highlights

செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த பிறகு கரூரில் அமமுக தொண்டர்களை அதிமுக அலேக்காக அறுவடை செய்து வருகிறது. தன் பின்னால் தொண்டர்களும் அணிவகுப்பர் என நினைத்த செந்தில் பாலாஜிக்கும், அமமுகவில் தொடர்ந்து நீடிப்பார்கள் என நினைத்த டி.டி.வி.அணியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த பிறகு கரூரில் அமமுக தொண்டர்களை அதிமுக அலேக்காக அறுவடை செய்து வருகிறது. தன் பின்னால் தொண்டர்களும் அணிவகுப்பர் என நினைத்த செந்தில் பாலாஜிக்கும், அமமுகவில் தொடர்ந்து நீடிப்பார்கள் என நினைத்த டி.டி.வி.அணியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும் அதிர்ச்சி தரும் வகையில் இன்றும் அமமுக தொண்டர்கள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இதனால், கரூரில் அதிமுக வலுவடைந்து வரும் நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. ‘’கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அ.ம.மு.க.வில் இருந்து விலகி தாய்க்கழகமான அ.தி.மு.க.வில் தொண்டர்கள் இணைந்து வருகின்றனர். அ.தி.மு.க. கரை வேட்டியை கழற்றி விட்டு, தி.மு.க. கரை வேட்டியை கட்ட நாங்கள் தயாராக இல்லை என அவர்கள் தெரிவித்திருப்பது பெருமிதமாக உள்ளது. கரூர் மாவட்டத்திலிருந்து அ.ம.மு.க.வை வழிநடத்துகிறேன் என்று சொன்ன செந்தில்பாலாஜி, உங்களையெல்லாம் விட்டு விட்டு பதவிக்காக தி.மு.க.வுக்கு சென்று விட்டார்.

தமிழகத்தின் உரிமை பறிபோகிறது என கூறும் அவர், தி.மு.க.விற்கு போய் உரிமையை பாதுகாக்க போகிறாரா? தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர் ஜெயலலிதா. முல்லை பெரியாறு, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலே நீதிமன்றத்தை நாடி உரிமையை நிலைநாட்டியவர் ஜெயலலிதா.

அம்மா வழியில் பயணிக்கும் நாங்கள் எந்த வகையிலும் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை செந்தில்பாலாஜி, டி.டி.வி.தினகரனை முதல்வராக்குவோம் என கூறி வந்தார். அதற்கு முன் போக்குவரத்து துறை அமைச்சராக அவர் இருந்த போது, உயிருள்ளவரை ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி விசுவாசமாக இருப்பேன் எனச்சொன்னார். இப்போது திடீரென அவர் தி.மு.க.வுக்கு தாவியிருப்பது எதற்காக? என்பது அனைவருக்கும் தெரியும்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் எந்த இயக்கத்தை எதிர்த்தனரோ, அக்கட்சியில் அவர் இணைந்துள்ளார். தற்போது அ.ம.மு.க. பீஸ் போனது போல் ஆகி விட்டது. அதைவிட்டு ஹை-வோல்டேஜ் மின்சாரம் என டி.டி.வி.தினகரன் கூறுவது நகைப்புக்குரியது. 1½ கோடி தொண்டர்களுடன் அ.தி.மு.க. மாபெரும் இயக்கமாக உள்ளது. உண்மை தொண்டர்கள் ஒருவரும் மாற்று கட்சிக்கு செல்லவில்லை. எப்போது தேர்தல் வந்தாலும் அதில் வெற்றி பெறும் வகையில் கரூர் மாவட்டத்தில் தேர்தல் களப்பணி சீரிய முறையில் இருக்கும். அ.தி.மு.க. மூழ்கும் கப்பலா? என்ற விமர்சனத்துக்கு வெற்றிகனியை பறித்து பதில் கொடுப்போம்’’ என்கிறார் எம்.ஆர்.விஜ0யபாஸ்கர்.

மேலும், சில தொண்டர்களையும் அதிமுகவிற்கு இழுக்கும் வேலையை எம்.ஆர்.விஜயபாஸ்கர் முடுக்கி விட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.  

click me!