கரூரில் கூடாரத்தை காலி பண்ணும் தினகரன் கட்சியினர்... இருந்த மிச்சம் மீதியையும் அட்ச்சி தூக்கிய அமைச்சர்!!

Published : Jan 31, 2019, 06:58 PM ISTUpdated : Jan 31, 2019, 07:03 PM IST
கரூரில் கூடாரத்தை காலி பண்ணும் தினகரன் கட்சியினர்... இருந்த மிச்சம் மீதியையும்  அட்ச்சி தூக்கிய அமைச்சர்!!

சுருக்கம்

கரூர் தோகைமலையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அமமுகவைச் சேர்ந்த 1,000 பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். 

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, தான் இருந்த அனைத்துக் கட்சிகளிலும் அம்மாவட்டத்தின் முக்கியப் புள்ளியாக இருந்த நிலையில். திமுக-வில் செந்தில் பாலாஜி இணைந்த பிறகு , ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் அம்மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி வாங்கினார்.

திமுகவில் பொறுப்பு வாங்கிய கையேடு தினகரனின் கூடாரத்தில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளை திமுகவிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கிய  செந்தில் பாலாஜி  அமமுக கட்சியை சேர்ந்த கோவை தெற்கு மாவட்ட இலக்கிய அணித் தலைவர் பொன்மலை குமாரசாமி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் ஐக்கியமானார்.

இதனைத் தொடர்ந்து, அதிமுகவினரும் செந்தில் பாலாஜிக்கு போட்டியாக ஆள் சேர்க்கும் வேளையில்  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குதித்தனர்.இதன்  பலனாக கரூர் தோகைமலையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அமமுக இளைஞரணி துணைச்செயலாளர் சந்திரசேகரன் உட்பட 1,000 பேர் அதிமுகவில் சேர்ந்தனர்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!