2021 ஏப்ரல் வரட்டும்... அமைச்சர்களின் ஊழல் எல்லாம் வெளிவரும்... நாள் குறித்த டிடிவி தினகரன்!

Published : Jan 31, 2020, 11:10 PM IST
2021 ஏப்ரல் வரட்டும்... அமைச்சர்களின் ஊழல் எல்லாம் வெளிவரும்... நாள் குறித்த டிடிவி தினகரன்!

சுருக்கம்

 எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அரசு ஒரு கம்பெனியைப் போல நடந்துகொண்டிருக்கிறது. அரசன் எவ்வழியோ அவ்வழியிலேயே ஆட்சியும் முறைகேடாக நடக்கிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விஷயத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மை வெளிவர வேண்டும். ஏற்கனவே நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிதாக மீண்டும் தேர்வை நடத்த வேண்டும்.  

அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வரும் 2021 ஏப்ரலுக்குப் பிறகு வெளிவரும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர் கூறுகையில், “டிஎன்பிஎஸ்சி தேர்வில் சில இடங்களில் மட்டுமே முறைகேடு நடந்துள்ளதாக அந்த அமைப்பு அறிக்கை அளித்துள்ளது. இதை மக்கள் யாரும் நம்பமாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அரசு ஒரு கம்பெனியைப் போல நடந்துகொண்டிருக்கிறது. அரசன் எவ்வழியோ அவ்வழியிலேயே ஆட்சியும் முறைகேடாக நடக்கிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விஷயத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மை வெளிவர வேண்டும். ஏற்கனவே நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிதாக மீண்டும் தேர்வை நடத்த வேண்டும்.
கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் ஆக வேண்டும். தற்போது இந்த அரசு அதிகாரத்தில் இருப்பதால் முறைகேடுகளை எல்லாம் மறைக்க முடிகிறது. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வரும் 2021 ஏப்ரலுக்குப் பிறகு வெளிவரும். தமிழக அரசு தன்னிச்சையாகச் செயல்படமுடியாத நிலையில்தான் உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு மாநகராட்சி, நகராட்சித் தேர்தலை இவர்கள் அறிவிப்பது சந்தேகம்தான்” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!