
எம்.ஜி.ஆர். பிறந்த நாளாக நாளை தனிக்கட்சி தொடங்குவது குறித்து மக்கிய முடீவு எடுக்கப்படும் என அறிவித்து டி.டி.வி.தினகரன் அதிமுக தொண்டர்களின் பல்ஸ்சை எகிற வைத்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணிகள் என பிரிந்தாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில், சசிகலா தரப்பினர் ஆட்சி அமைத்தனர். அதே நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிமுகவை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நிமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் வழிநடத்தி வந்தார். இந்நிலையில்தான் இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் என அதிமுகவின் இரு தரப்பும் சொந்தம் கொண்டாடியது. இதைத் தொடர்ந்து இரட்டை இலை முடக்கப்பட்டது.
ஆனால் இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு தினகரன் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில்தான் சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அவருக்கு எதிராக திரும்பு ஓபிஎஸ்சுடன் கைகோர்த்தார்.
இதைத் தொடர்ந்து இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் ஓர் அணியாகவும், டி.டி.வி.தினகரன் ஓர் அணியாகவும் செயல்படத் தொடங்கினர். இந்த நேரத்தில்தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் டி.டி.வி.தினகரன் சுயேட்சையாக ந்னிறு வெற்றி பெற்றார். இதையடுத்து அதிமுகவில் தனக்குத்தான் செல்வாக்கு உள்ளது என முடிவு செய்த தினகரன் அக்கட்சியை கைப்பற்ற முயன்று வருகிறார்.
இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன் ,தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக நாளை எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ஆதரவாளக்ளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்த தினகரன், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். எனவும் கூறினார்.