
தேர்தல் வந்தால்தான் ராகுல் காந்தி கோவிலுக்கு செல்வார் என்றும் கோவிலுக்கு போறேன்… சாமி கும்பிடுறேன்… என ராகுல் காந்தி பிலிம் காட்டுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் அமேதி மக்களவை தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரான பின் முதன்முறையாக உத்தர பிரதேசத்தில் 2 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டார்.
லக்னோவில் இருந்து அமேதி தொகுதிக்கு செல்வதற்கு முன் அனுமன் கோவிலுக்கு சென்று ராகுல் காந்தி வழிபட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொது செயலாளர் அருண் சிங் ராகுடல காந்தி கோவிலுக்கு செல்லும் முறையை தீவிரமுடன் கடைப்பிடிப்பவர் என்றால், கட்சி தலைவர் பதவிக்கு வந்தவுடனேயே ஆசி பெற கோவிலுக்கு சென்றிருக்க வேண்டும் என கிண்டல் செய்தார்..
பொதுவாக ஒருவர் ஒரு புதிய பொறுப்பினை ஏற்று கொண்ட பின் இறைவனின் ஆசியை பெறுவதற்காக கோவிலுக்கு செல்வது என்பது நம்முடைய மரபு. ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவரான பின் எந்த கோவிலுக்கும் செல்லவில்லை என குற்றம்சாட்டினார்..
அதேநேரத்தில் குஜராத் தேர்தலின்பொழுது அவர் கோவிலுக்கு சென்றார். சாமி கும்பிட்டார். பொதுவாக ராகுல் காந்தி இது போன்று அவர் கோவிலுக்கு செல்கிறேன் என கூறி அடிக்கடி பிலிம் காட்டுகிறார் என அருண்சிங் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சி ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த பின் மற்றொரு தேர்தலில் தோல்வி என சந்தித்து வரும் நிலையில் ராகுல் காந்தி வருந்தத்தக்க மனநிலையில் உள்ளார் என தெரிவித்தார்