தினகரன் எல்லாம் ஒரு ஆளா? - பாஜக முரளிதரராவ் கிண்டல்…!!!

First Published Jun 23, 2017, 8:11 PM IST
Highlights
ttv dinakaran is a not admka party member said bjp muralitharav tease


டிடிவி தினகரன் ஒன்றும் தனித்தலைவன் இல்லை எனவும் ஒரு சாரார் அவரை துணைப் பொதுச்செயலாளராக்கியுள்ளதால் அவரிடம் ஆதரவு கேட்கவில்லை எனவும் பாஜக தேசிய செயலாளரும் பொறுப்பாளருமான முரளிதராவ் தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நிலைபாடுகளில் அரசியல் கட்சிகள் இரங்கி உள்ளன.

இதற்கான வேட்பாளராக பாஜக சார்பில் பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தும் காங்கிரஸ் தரப்பில் முன்னாள் சபாநாயகர் மீராக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிக்க கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திடமும் பாஜக கேட்டுக்கொண்டது.

பின்னர், அதிமுகவை சேர்ந்த ஒ.பி.எஸ்சும், இ.பி.எஸ்சும் ஆதரவு தெரிவிப்பதாக கூரினர். மேலும் இன்று ராம்நாத் கோவிந்த்தின் வேட்பு மனுதாக்கல் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து தினகரன் தரப்பினரும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூரினர்.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளரும் பொறுப்பாளருமான முரளிதராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டிடிவி தினகரனை வேட்புமனுதாக்கல் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த முரளிதராவ், தமிழகத்தின் தற்போதய முதலமைச்சர் எடப்பாடியையும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்சையும் ஆதரவு கேட்டு அழைப்பும் விடுத்தோம் என தெரிவித்தார்.

டிடிவி.தினகரன் தனித்தலைவன் இல்லை. அவரை ஒரு சாரார் துணை பொதுசெயலாளராக இணைத்து உள்ளனர். அதனால் அவரிடம் ஆதரவு கேட்கவில்லை எனவும் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியிலும் பங்கேற்க அழைக்கவில்லை எனவும் முரளிதரராவ் பதிலளித்தார்.                         

click me!