தாய்மாமன் மகன் மரணத்தால் அதிர்ச்சி - தஞ்சை விரைந்தார் டி.டி.வி.தினகரன்

Asianet News Tamil  
Published : Apr 15, 2017, 11:00 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
தாய்மாமன் மகன் மரணத்தால் அதிர்ச்சி - தஞ்சை விரைந்தார் டி.டி.வி.தினகரன்

சுருக்கம்

ttv dinakaran going to tanjore

அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகன். இவரது மகன் மகாதேவன். இன்று காலை குடும்பத்துடன் திருவிடைமருதூர் கோயிலுக்கு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக மகாதேவனை மீட்டு, கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், தாய் மாமாவின் மகன் இறந்த சம்பவத்தை அறிந்ததும், கடும் அதிர்ச்சியடைந்தார். தஞ்சாவூருக்கு விரைந்துள்ளார்.

மகாதேவன், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்தார். அப்போது, அதிமுகவின் அனைத்து மூத்த நிர்வாகிகளுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. இதையொட்டி அமைச்சர்கள் பலர் தஞ்சாவூர் செல்ல உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Voter ID Card: வோட்டர் ஐடி தொலைஞ்சு போச்சா? கவலைப்படாதீங்க! 2 நிமிஷத்துல டவுன்லோட் பண்ணலாம்.!
மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?! திருவிழா கோலத்தில் நீலாங்கரை.!!!