
ஆன்லைன் கிளாஸை பல மாசமா அட்டெண்ட் பண்ணாத, ஸ்கூல் ஃபீஸும் கட்டாத, எந்த புக்குல என்ன பாடம் இருக்குதுன்னே தெரியாத, ஆனா செமத்தியா குறட்டை விட்டு தூங்கிட்டிருந்த ஸ்கூல் பையன் திடுதிப்புன்னு எந்திரிச்சு ஒக்காந்து ‘இப்ப எக்ஸாம் வையுங்கடா! நான் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணி காட்டுறேன்’ என்று சொன்னாக்க, உங்களுக்கெல்லாம் எப்படி கெக்கே பிக்கேன்னு சிரிப்பு வருமோ அப்படியான ஒரு ஜோக்கை அடிச்சிருக்கார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன்.
அதாவது உள்ளாட்சி தேர்தல் நடப்பது கிட்டத்தட்ட உறுதி என்று தெரிந்ததுமே கடந்த சில வாரங்களாக கடுமையாக உழைத்து, தேர்தலுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டு வந்தன அத்தனை கட்சிகளும். கமல்ஹாசன் கூட போன வாரமே இரண்டு செட் மாநகராட்சி பட்டியலை வெளியிட்டு அசத்தினார். பெரிய கட்சிகளோ வழக்கம்போல் கமுக்கமாக கட்சிப்பணியில் கலக்கினர்.
ஆனால் அ.ம.மு.க. கூடாரத்தில் பெரிய சைலன்ஸ். அக்கட்சியில் இருக்கும் நாலஞ்சு நிர்வாகிகளும் கடுப்பாகிப் போயி, தினகரனுக்கு போன் போட்டபோது ‘நாட் ரீச்சபிள்’ என்று வந்திருக்கிறது. உடனே அவர்கள் தினகரன் குடும்ப தரப்பில் கேட்டபோதுதான் அவர் பாண்டிச்சேரி அருகே தன் பண்ணை வீட்டில் ரெஸ்டில் இருப்பது தெரிந்திருக்கிறது. குடும்பத்தினரிடம் ‘தேர்தல் நெருங்குது. தலைவரை கட்சிக்கு வரச்சொல்லுங்க’ என்று கெஞ்சியிருக்கின்றனர். ஆனாலும் சில நாட்கள் அட்ரஸே இல்லை தினகரன்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவது உறுதியாகி, தேதியும் அறிவிக்கப்பட்டதும் தினகரன் வீறுகொண்டு எழுந்து வந்திருக்கிறார். வந்தவர் கம்முன்னு களப்பணியை ஆற்றினாலும் கூட பரவாயில்லை. ஆனால் ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளோம். வேட்பாளர்கள் பட்டியல் தயாராக உள்ளது. அ.ம.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய துவங்குகின்றனர். இம்முறை நிறைய இடங்களில் வெற்றி பெறுவோம்.” என்று சொன்னார்.
இதை ‘எப்படி பாருடா கொஞ்சம் கூட சிரிக்காம ஜோக்கடிக்கிறார்னு’ என்று கலாய்க்க துவங்கியுள்ளனர் அவரது கட்சி நிர்வாகிகளே.
தினகரனின் நிர்வாகிகளே இப்படி கலாய்க்கும்போது விமர்சகர்களும், நெட்டிசன்களும் சும்மாவா இருப்பார்கள். அவர்கள் தங்கள் பங்குக்கு “அய்யய்யோ தெய்வமே நீங்க தனித்துப் போட்டியா? முதல்லேயே சொல்லியிருந்தா தேர்தலே நடத்தாம உங்க கட்சி வேட்பாளர்களை எல்லா பதவியிலேயும் நியமிச்சிருக்கலாமே” என்று நையாண்டி செய்துள்ளனர்.
தி.மு.க. இணையதள விங் பக்கம் ஒன்றில் ‘இவரு வேற குறுக்க மறுக்க வந்து காமெடி பண்ணிட்டு இருக்காரு. தள்ளிப்போயி சைக்கிளை ஓட்டுங்க டிடிவி’ என்று கலாய்த்திருக்கிறது.