"பண்ணைவீட்டில் பாதாள அறைகள், டிஜிட்டல் லாக்கர் எதுவும் இல்லை" கூலாக சொல்லும் தினகரன்

Asianet News Tamil  
Published : Nov 11, 2017, 12:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
"பண்ணைவீட்டில் பாதாள அறைகள், டிஜிட்டல் லாக்கர் எதுவும் இல்லை" கூலாக சொல்லும் தினகரன்

சுருக்கம்

TTV Dinakaran Exclusive press meet regards IT Raids

சசிகலா குடும்பத்தினருக்கும் சொந்த பந்தங்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் என 187 இடங்களில் நேற்று முன்தினம்  தொடங்கிய வருமான வரித்துறையின் சோதனை 51 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வருமானவரித்துறையினரின் இந்த மெகா ரெய்டில் சுமார் 1800 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இரவு பகலாக நடக்கும் இந்த சோதனை இன்றும் நடத்தி வருகின்றனர்.

மூன்றாவது நாளாக தொடரும் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், ரோலக்ஸ் வாட்சுகள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் சசி உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிடிவி தினகரன் பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; வருமான வரித்துறை ரெய்டு உள்நோக்கம் கொண்டது என அவர் குற்றம் சாட்டினார். ஆனால் அந்த உள்நோக்கம் என்ன என்பது தமக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார். வருமானவரித்துறை சோதனைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறினார். வருமான வரித்துறை சோதனையை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அவர் கூறினார்.

மேலும், புதுச்சேரி அருகே பொம்மையார் பாளையத்தில் உள்ள பண்ணைவீட்டில்  பாதாள அறைகள் டிஜிட்டல் லாக்கர் என எதுவுமே  இல்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். அதுமட்டுமல்ல பண்ணை வீட்டில் பேஸ்மென்ட்டே இல்லை என்றும் அவர் கூறினார்.  மேலும் நான் ஒன்றும் காந்தி பேரன் அல்ல சாதாரண மனிதன் தான் என்று என செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கூலாக பதிலளித்தார் தினகரன்.

PREV
click me!

Recommended Stories

சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!
பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!