சசிகலா குடும்பத்தில் 3-வது கட்சி உதயம்... தினகரனுக்கு எதிராக களமிறங்கும் டிடிவி பாஸ்கரன்!

First Published Jun 25, 2018, 4:07 PM IST
Highlights
TTV Dinakaran brother is starting a new party


சசிகலாவின் குடும்பத்தில் மற்றொரு புதிய கட்சி உதயமாக உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரனின் உடன் பிறந்த சகோதரரான டிடிவி பாஸ்கரன் புதிய கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிகமுக பல பிரிவுகளாக பிரிந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை
முதலமைச்ச்ர ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அதிமுக கட்சி சின்னம் வழங்கப்பட்ட நிலையில், டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற
கட்சியை துவக்கினார்.

இதனால், டிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினருக்கும் இடையே மோதல் எழுந்தது. தினகரனுக்கு எதிராக சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதிய கட்சி
ஒன்றை அண்மையில் தொடங்கினார். அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார் திவாகரன்.

சசிகலா குடும்பத்தில் ஏற்கனவே பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், சசிகலா குடும்பத்தில் 3-வது நபர் கட்சி தொடங்க
உள்ளதாக அறிவித்துள்ளார். 

டிடிவி தினகரனின் உடன் பிறந்த சகோதரரான டிடிவி பாஸ்கரன் புதிய கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். விரைவில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த ஜெயலலிதா வழியில் பயணிப்பதாக டிடிவி தினகரனும், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வழியில் பயணிப்பதாக திவாகரனும் கூறியுள்ள நிலையில், எம்.ஜி.ஆரின் தொண்டர்களுக்காக நான் என்று டிடிவி பாஸ்கரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனின் சொந்த தம்பியே அவருக்கு எதிராக அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.

click me!