18 + 4 + 97…. எடப்பாடி அரசை கவிழ்க்க டி.டி.வி. போடும் புதுக்கணக்கு !! திமுகவுடன் இணைந்து அட்டாக் பண்ண ரெடி !!

By Selvanayagam PFirst Published Oct 13, 2018, 7:27 PM IST
Highlights

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் டி.டி.வி. தினகரன் 18 எம்எல்ஏக்கள் மற்றும் தற்போது கருணாஸ் உள்ளிட்ட தனக்கு ஆதரவாக உள்ள 4 எம்எல்ஏக்களையும் சேர்ந்து திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை கவிழ்க்க தயாராகி விட்டார்.

என்னதான்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்களாக இருந்தாலும் சிலர் இன்னும் சசிகலா விசுவாசிகளாகவே இருக்கிறார்கள். அண்மையில் நடந்த அதிமுக உறுப்பினர் சேர்க்கை விழாவில் சசிகலா அதிமுகவின் உறுப்பினரே கிடையாது என அறிவித்ததை பல அமைச்சர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் அதிருப்தி  அடைந்த அமைச்சர்கள் சில வழக்கறிஞர்கள் மூலமாக சசிகலாவை சந்திக்க தூதுவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மட்டும் சசிகலா ஓகே சொல்லிவிட்டார் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார் என ஏற்கனவே  அவர் மீது கடுப்பில் இருக்கும் சில அமைச்சர்கள் சசிகலா சொல்வதை இனி கேட்பது என முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனி டிராக்கில் சென்று கொண்டிருக்கிறார்.

தற்போது அவர் முழுவதும் நம்பி இருப்பது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் வழக்கைத் தான். அந்த வழக்கில் 18 எம்எல்ஏக்களை நீக்கியது செல்லாது தீர்ப்பு வந்துவிட்டால் கண்டிப்பாக வடப்பாடி ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று உறுதியாக இருக்கிறார்.

ஏற்கனவே உள்ள 18 எம்எல்ஏக்களுடன் தற்போது தினகரனை ஆதரிக்கும் 3 எம்எல்ஏக்கள் மற்றும் கருணாஸ் ஆகியோர் இதற்கு தயாராக உள்ளனர். ஏற்கனவே மைனாரிட்டி அரசு என கிண்டல் செய்யும் திமுக தனது 97 எம்எல்ஏக்களையும் எடப்பாடி அரசுக்கு எதிராக களமிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது 18 எம்எலஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு ஒன்றுதான் பாக்கி. அது வந்தால் இந்த அரசு நிச்சயமாக கவிழ்க்கப்படும் என உறுதியாக நம்புகிறார் டி.டி.வி.தினகரன்.

click me!