டிடிவி தினகரன் கைது நடவடிக்கை ஒரு சதி... - சொல்கிறார் புகழேந்தி...

 
Published : May 08, 2017, 08:57 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
டிடிவி தினகரன் கைது நடவடிக்கை ஒரு சதி... - சொல்கிறார் புகழேந்தி...

சுருக்கம்

ttv dinakaran arrested is a conspiracy told by karnataka secretary pugalent

தினகரன் தலைமையில் ஆட்சியையும் கட்சியும் சென்று விடும் என்ற அச்சத்தில் அவர்மேல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மா அணி கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமாக இரட்டை இலை சின்னத்தை பெற அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரா என்ற புரோக்கருக்கு 1.30 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து விசாரணையில் உறுதிபடுத்தபடவே டிடிவி தினகரன் கைது செய்யபட்டார். மேலும் பணபரிவர்த்தனைகளில் உதவிய அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டு இருவரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டிடிவி தினகரனின் கைது நடவடிக்கைக்கு எதிராக மதுரை சூலூரில் அதிமுக அம்மா அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டிடிவி கைதுக்கு எதிரான ஆர்பாட்டத்தில் அதிமுக அம்மா அணி கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

ஒ.பி.எஸ் என்ற வண்டியில் டயர், ட்யூப், என கீழே விழாத பகுதியே இல்லை.

தினகரன் தலைமையில் ஆட்சியையும் கட்சியும் சென்று விடும் என்ற அச்சத்தில் அவர்மேல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்தபோது ஏன் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிடவில்லை என்கிறார்கள்.

ஜெயலலிதா சிறையில் இருந்தபோது 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

உயிரிழப்புகளை தடுக்க ஜெயலலிதா புகைப்படத்தை வெளியிடவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!