திஹார் சிறையில் அடைக்கப்பட்டார் டிடிவி தினகரன் - நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது டெல்லி போலீஸ்...

Asianet News Tamil  
Published : May 01, 2017, 07:01 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
திஹார் சிறையில் அடைக்கப்பட்டார் டிடிவி தினகரன் - நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது டெல்லி போலீஸ்...

சுருக்கம்

ttv dinakaran appear to thihar jail by delhi police

இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மே 15 வரை திஹார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி டிடிவி தினகரன் சிறையில் அடைக்கப்பட்டார். 

டெல்லி ஓட்டல் ஒன்றில் டெல்லி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுகேஷ் என்பவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவரை கைது விசாரணை நடத்தியதில் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில் டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர். பின்னர்,  டெல்லி ஹிஸ் தசாரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதையடுத்து தினகரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தற்போது காவல் கெடு முடிவடைந்ததையடுத்து இன்று மீண்டும் நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தபட்டார்.

அவரையும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் மே 15 வரை திஹார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி தற்போது இருவரையும் போலீசார் திஹார் சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் மொத்தம் எத்தனை கட்சிகள் உள்ளன? இத்தனை கட்சிகள் தேவை தானா? இதை கட்டுப்படுத்த என்ன வழி?
துறையூரை திமுகவுக்கு தாரை வார்க்கும் அ.தி.மு.க..! கொதிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்..! எடப்பாடிக்கு ரெட் அலர்ட்..!