மண்ணை வாரிப்போட்ட தேர்தல் ஆணையம்!! கொல காண்டில் டிடிவி தினகரன்...

By sathish kFirst Published Jan 7, 2019, 12:45 PM IST
Highlights

தேர்தலில் ஜெயித்து ஆளும் கட்சியையும், பலம் பொருந்திய எதிர்கட்சியையும் அலறவிட நினைத்த தினகரனின் கனவில் மண்ணை வாரிப் போடும் விதமாக, இன்று காலை இந்திய தேர்தல் ஆணையம் திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவித்துள்ளது. 

ஆர்.கே.நகரில், அதிமுகவை தோற்கடித்தும், திமுகவை டெபாசிட்டை காலி செய்து வீட்டிற்கு அனுப்பியதைப்போல அதே பார்முலாவை  ஆர்.கே.நகருக்கும் வைத்திருந்தார். ஏற்கனவே அதிமுக தம்மை துரத்திய கடுப்பில் ஆர்.கே.நகரை அட்ச்சி தூக்கிய தினகரன். இப்போது தன்னுடைய வலதுகையயை ஸ்கெட்ச் போட்டு தூங்கியதால் கொல காண்டில் இருக்கும் தினகரன் ஆர்.கே.நகரில் அடித்தது அடி இல்ல, திருவாரூரில் திணற திணற மரண காட்டு காட்ட தன்னுடைய ஆதரவாளர்களுடன் பிளான் போட்டு வந்தார்.

இதற்காக  ரூ.20 கோடியை பட்ஜெட் போட்டு வைத்திருந்த தினகரன். பட்டுவாடா, பூத் கமிட்டி செலவு, பிரச்சார செலவு என யார் யாரிடம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பர்பெக்ட்டாக பிளான் போட்டு வைத்திருந்தார்.    

தேர்தலில் ஜெயித்து ஆளும் கட்சியையும், பலம் பொருந்திய எதிர்கட்சியையும் அலறவிட நினைத்த தினகரனின் கனவில் மண்ணை வாரிப் போடும் விதமாக, இன்று காலை இந்திய தேர்தல் ஆணையம் திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவித்துள்ளது. திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா நடக்காதா என தொடர் குழப்பம் நீடித்து வந்த நிலையில் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் கொல காண்டில் இருக்கும் தினகரன், தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான கருத்து தெரிவித்துள்ளார். அதில், தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு, கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். இது ஜனநாயக நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகும் என பதிவிட்டுள்ளார்.

தனது அடுத்த பதிவில், இந்த ஜனநாயக விரோத செயலை ஆளும் அ.தி.மு.க. வுக்கு சாதகமாக செய்ய முயன்றபோதே கண்டித்திருக்க வேண்டிய  தி.மு.க.வும் இதற்கு துணைபோனது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வுக்கும் தோல்வி பயம் இருந்ததையே இது காட்டியது எனக் கோரியுள்ளார்.

அடுத்ததாக, திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்தே இந்த விஷயத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கைகோர்த்துள்ளன. இதற்கு சரியான தண்டணையை எப்போது தேர்தல் வந்தாலும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வழங்க திருவாரூர் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

click me!