அதிமுக வெற்றியை தட்டி பறிக்கும் டிடிவி.தினகரன்.. பிந்தைய கருத்து கணிப்பில் கெத்து காட்டும் அமமுக..!

By vinoth kumarFirst Published Apr 30, 2021, 11:34 AM IST
Highlights

தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், பெரும்பாலான இடங்களில் அதிமுக வெற்றியை அமமுக தடுப்பதாகவே பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், பெரும்பாலான இடங்களில் அதிமுக வெற்றியை அமமுக தடுப்பதாகவே பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டனர். ஆனால், தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில், 56 தொகுதிகளில் இருந்து 68 தொகுதிகள் வரை மட்டுமே வெற்றி பெற முடியும் என பெரும்பான்மையான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. 

அதேநேரத்தில், தேமுதிக, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட சிறிய கட்சிகளை கூட்டணியில் அமைத்து முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. இதில், அமமுக 4 முதல் 6 தொகுதிகளில் வெற்றிபெறும் என்பது தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ரிபப்ளிக், பி-மார்க், உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளால் அமமுக வட்டாரம் மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் கொண்டுள்ளது. 

சட்டமன்றத் தேர்தலின் போது அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் பாஜக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால், இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சம்மதிக்காததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஒருவேளை அதிமுக, அமமுக இணைந்திருந்தால்  தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருந்திருக்கலாம். 

click me!