கொரோனா பெருந்தொற்று எதிரொலி.. கோவில்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் பார்சல்..

By Ezhilarasan BabuFirst Published Apr 30, 2021, 10:40 AM IST
Highlights

கொரோனா பெருந்தொற்று காரணமாக கோவில்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் பார்சல் மூலம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் காரணத்தால் தமிழக அரசு நோய்த்தொற்றை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.  

கொரோனா பெருந்தொற்று காரணமாக கோவில்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் பார்சல் மூலம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் காரணத்தால் தமிழக அரசு நோய்த்தொற்றை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி முதல் வழிபாட்டு தடங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் கோவில்களில் பக்தர்கள் இன்றி பூஜைகளுக்கு மட்டும்  அனுமதிக்கப்பட்டது. 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தினசரி காலையில் பூஜை முடிந்தபின் கோவில் அறநிலைத்துறை சார்பில் பக்தர்களுக்கு கோவிலின் உள்ளே அன்னதானம் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதித்ததால் கடந்த நான்கு நாட்களாக மதியம் 11 மணி முதல் 12 மணி வரை தினசரி  200 நபர்களுக்கு அன்னதானம் கோவிலின் வெளியே பார்சல் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று கடவுளை வழிபட்டுவிட்டு அன்னதானத்தை பெற்றுசெல்கிறார்கள். கடந்த ஆண்டும் இதேபோன்று கொரோனா உச்சத்தில் இருந்தபோது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பொதுமக்களுக்கு பார்சல் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

click me!