
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது தவறை உணர்ந்து விட்டார் என்றும், எடப்பாடி பழனிசாமி மேலும் மேலும் துரோகமிழைக்கிறார் என்று டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த மேற்கு மண்டலம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோடு பகுதியில் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி. தினகரன்;- திமுகவை அமைச்சர் செந்தில் பாலாஜியே முடித்துவிடுவார். மீண்டும் திமுக ஆட்சி கவிழ்வதற்கு மின் கட்டண உயர்வு போதும். கடந்த திமுக ஆட்சியில் தமிழக மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டனர். இந்த திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் மக்களால் ஏற்கும் அளவிற்கு இருக்க வேண்டும். வாட்டி வதைக்கும் வகையில் இருக்கக் கூடாது.
இதையும் படிங்க;- என் பொண்ணு கேஷுவலாக கேட்குறா! ரெய்டுக்கு அடுத்து எப்போ வர போறீங்கன்னு!அசராமல் அசால்டாக பதில் சொன்ன விஜயபாஸ்கர்
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டி முதலமைச்சர் ஸ்டாலினையே பொதுச் செயலாளராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சர்களின் ஊழலை கண்டித்தேன், திருந்தவில்லை. இப்போது அனுபவிக்கிறார்கள். அம்மாவிற்கு துரோகம் செய்துள்ளனர். விலைபோகாதா சிங்கங்கள் இன்னும் அதிமுகவில் சிலர் உள்ளனர். கொங்கு மண்டலம் கோட்டை என்றார்கள். இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் என்னாயிற்று?
எலி வலையானாலும் தனிவலை என்று அமமுக கூட்டம் உண்டு. 1988 ஆம் ஆண்டு என் 26 வயதிலேயே முன்னாள் முதல்வர் கருணாநிதியை எதிர்கொண்டேன். இந்த எடப்பாடியெல்லாம் எம்மாந்திரம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது தவறை உணர்ந்து விட்டார் என்றும், எடப்பாடி பழனிசாமி மேலும் மேலும் துரோகமிழைக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் இருக்கும். வேலுமணி, தங்கமணியெல்லாம் இப்போ NO மணியாகிவிட்டன. அதிமுக வென்ற 65 தொகுதி என்பது 65,000 கோடி ருபாய் உழைப்பு. நாடாளுமன்ற தேர்தலில் நம் கணக்கை துவக்குவோம் எண அண்ணா பிறந்தநாளில் சபதமேற்போம் டிடிவி. தினகரன் பேசியுள்ளார்.
இதையும் படிங்க;- அமமுகவில் அதிரடி மாற்றம்.. டிடிவி தினகரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - தொண்டர்கள் ஷாக் !