இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் இந்த இயக்கம் தொண்டர்களால் நூறாண்டு காலம் இருக்கும் என ஜெயலலிதா சொன்னதை நிறைவேற்றும் விதமாக நானும் ஓபிஎஸ் அவர்களும் கைகோர்த்து இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒற்றை தலைமை மோதல்
அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை மோதல் காரணமாக 4 பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்க்ப்பட்டார். இதன் காரணமாக எடப்பாடிக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்திய ஓபிஎஸ் தற்போது டிடிவி தினகரனோடு இணைந்து எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க தொடங்கியுள்ளார். இந்தநிலையில் தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் இல்ல திருமண விழாவில் டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஒன்றாக கலந்து கொண்டனர். இதனையடுத்து மணமக்களை வாழ்த்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசிய போது,
சுயநலத்தால் பிரிந்து நிற்க வேண்டிய நிலை
அம்மாவின் தொண்டர்களாக அம்மாவின் நிர்வாகிகளாக 30 ஆண்டுகளாக இந்த இயக்கத்தில் பணியாற்றியவர்கள் எல்லாம் இன்று ஒரு சிலரின் சுயநலத்தால், பண திமிரால், பிரிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுக்குள் இருந்த வருத்தங்களையும் கஷ்டங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு மீண்டும் தமிழ்நாட்டிலே ஜெயல்லிதாவின் அவர்களின் உண்மையான ஆட்சியை உருவாக்குவதற்கும், அம்மாவின் லட்சியங்களை இன்னும் சொல்லப்போனால் இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் இந்த இயக்கம் தொண்டர்களால் நூறாண்டு காலம் இருக்கும், அம்மா சொன்னதை நிறைவேற்றும் விதமாக நான் ஓபிஎஸ் அவர்களும் கைகோர்த்து இருப்பதாக தெரிவித்தார். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வைத்தியலிங்கம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பும் நட்பும் என்றைக்கும் தொடரும்
காலத்தின் கட்டாயத்தால் நாங்கள் பிரிந்து இருக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டாலும், அரசியலை எல்லாம் தாண்டி எங்களுக்குள் இருந்த அன்பும் நட்பும் என்றைக்கும் தொடர்ந்து இருக்கும் என்பதை இங்கு வந்திருக்கும் இந்த அனைவருக்கும் தெரியும். அம்மாவின் லட்சியங்களை தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும், அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் தொடர்வதற்காகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்து செயல்பட தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்