ஒதுங்கிக் கொண்ட டி.டி.வி.தினகரன்... வேலூரில் திமுகவை தெறிக்கவிட அதிரடியாய் களமிறங்கும் எடப்பாடி..!

By Thiraviaraj RMFirst Published Jul 12, 2019, 4:55 PM IST
Highlights

வேலூர் தொகுதியை எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கி சமபலத்துடன் அதிமுகவும், திமுகவும் மோதுகின்றன. 
 

வேலூர் தொகுதியை எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கி சமபலத்துடன் அதிமுகவும், திமுகவும் மோதுகின்றன.

 

வேலூர் மக்களவை தொகுதியில்  ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் களமிறங்குகிறார். 

மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. 37 தொகுதிகளில் திமுக அபார வெற்றி பெற்றது. 22 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது அதிமுக. இடைத்தேர்தலில் அதிக கவனம் செலுத்தியதால் மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததாக அதிமுகவினர் தங்களை சமாதானப்படுத்திக் கொண்டனர்.  

இந்நிலையில் வேலூர் அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களிடம், கடந்த மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரப் பணிகள் இருந்தும் தோல்வி அடைய அமமுகவும் ஒரு காரணம். அதிமுக ஓட்டை பிரித்து விட்டனர். இதனால் சில தொகுதிகளில் வெற்றி வாய்க்காமல் போய் விட்டது. 

ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை. அமமுகவில் இருந்து பலர் நம்மிடம் வந்துவிட்டனர். அத்தோடு அமமுக போட்டியிடாமல் ஒதுங்கி விட்டது. வேலூர் பகுதியைச் சேர்ந்த முகமதுஜானை ராஜ்யசபா எம்.பி.யாக்கி இருக்கிறோம். இந்த தொகுதியில் பாமகவுக்கும் செல்வாக்கு இருப்பதால் அன்புமணியை ராஜ்யசபா எம்.பி.யாக்கி இருக்கிறோம். இந்த ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால்தான் அதிமுகவின் செல்வாக்கு சரியவில்லை என்பதை காட்ட முடியும். ஆகையால் இந்த ஒரு தொகுதியில் அதிக கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார். இந்தத் தொகுதியை வென்று பாஜகாவுக்கு நமது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது.

 

தேனி தொகுதியில் ஓ.பி.எஸ் தனது மகனை வெற்றி பெற வைத்து தனது பலத்தை நிரூபித்தார். இந்த முறை வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற வைத்து தனது பலம் என்னவென்று காட்ட வேண்டும் என விரும்புகிறாராம் எடப்பாடி.

அதேவேளை திமுகவோ, 37 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதால் அதனை மனதில் வைத்து எளிதாக கடந்து சென்று விடக்கூடாது. வேலூரை கைப்பற்றியாக வேண்டும். வேலூரை தவறவிட்டால் 37 இடங்களில் வெற்றி பெற்றது அர்த்தமில்லாமல் போய்விடும். பாஜக ஆளும் கட்சியாக இருப்பதால் நமக்கு எதிராக பல அஸ்திரங்களை ஏவிவிடுவார்கள். அதனையும் மீறி வெற்றி பெற வேண்டும். ஏ.சி.சண்முகம் பணபலத்திலும் தேர்தல் களத்திலும் கைதேர்ந்தவர் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாம் திமுக தலைமை. 
 
அதனை மனதில் கொண்டே தேர்தல் பொறுப்பாளர்களாக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஜெயத்ரட்சகன் மற்றும் ஆர்.காந்தி, நந்தகுமார், முத்தமிழ்செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

click me!