டி.டி.வி.தினகரன் கட்சியில் வேட்பாளராக ஓ.பி.எஸ் உறவினர்... திருப்பரங்குன்றத்தில் திகுதிகு..!

Published : Apr 29, 2019, 05:41 PM IST
டி.டி.வி.தினகரன் கட்சியில் வேட்பாளராக ஓ.பி.எஸ் உறவினர்... திருப்பரங்குன்றத்தில் திகுதிகு..!

சுருக்கம்

திருப்பரங்குன்றம் தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிடும் மகேந்திரன், ஓ.பி.எஸ்-க்கு நெருங்கிய உறவினர். கட்சி பிரியாமல் இருந்த போது ஓ.பி.எஸுடன் வலம் வந்தவர். 

இடைத்தேர்தல் நடக்கிற திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடந்தது. அப்போது பேசிய அதிமுக வேட்பாளர், முனியாண்டி ‘‘நான் கட்சியில் இந்தளவு வளர்ச்சியடைந்து, வேட்பாளரானதற்கு ஓ.பன்னீர் செல்வம் தான் காரணம்’’ என புகழ்ந்து தள்ளினார்.

 

அங்கிருந்த தொண்டர்களில் சிலருக்கு, வேட்பாளரின் பேச்சு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. முனியாண்டியை ஒன்றிய கவுன்சிலர் துவங்கி, ஒன்றிய சேர்மன் வரைக்கும் படிப்படியாக வளர வைத்தவர் மறைந்த திருப்பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ சீனிவேல்.

அவரை சொல்லாமல் மேடையில் இருக்கிறவரை குஷிப்படுத்த நாக்கூசாமல் பொய் சொல்றாரே... என அருகில் இருந்தவர்கள் முணு முணுத்துள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிடும் மகேந்திரன், ஓ.பி.எஸ்-க்கு நெருங்கிய உறவினர். கட்சி பிரியாமல் இருந்த போது ஓ.பி.எஸுடன் வலம் வந்தவர். 


 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!