தினகரன் காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார்.. அதுக்கு எல்லாம் வாய்பே இல்லை.. அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி..!

By vinoth kumarFirst Published Mar 3, 2021, 12:28 PM IST
Highlights

அதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். 

அதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலில் பாமக, திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 250 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- பரபரப்பான தேர்தல் அரசியல் சூழலில், காமெடி செய்ய ஆட்கள் வேண்டும். டிடிவி தினகரன் காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார். அமமுக தலைமையில் அதிமுக கூட்டணி அமைவதற்கு வாய்ப்பில்லை. பாமகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அதுபோலவே கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளுடனும் விரைவில் உடன்பாடு ஏற்படும். இதிலிருந்து திசைமாற்ற யார் என்ன முயற்சி செய்தாலும் அதில் அதிமுக சிக்காது.

திமுக ஆட்சியில் மொத்தம் தமிழுக்கான விருதுகளை அறிவித்தது 8 விருதுகள் தான். ஆனால் இன்று 88 விருதுகள் உள்ளன. இவ்வளவு விருதுகள் கிடைத்திருக்கிறது என்றால் அது தமிழுக்கு மட்டும்தான், அதை உருவாக்கியது அண்ணன் எடப்பாடியார் தான் என்று பெருமிதம் தெரிவித்தார்.

தெடர்ந்து பேசிய அவர், தேமுதிகவின் எல்.கே சுதீஷ் பேஸ்புக் பதிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் அதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது. தேவையை அவர்கள் கூறியுள்ளார்கள் எங்களால் என்ன தர முடியுமோ அதை நாங்கள் தருவோம். முதல்வராக வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும், 'எங்கள் முதல்வர்' எனக் கூறுவதற்கு தகுதியான மனிதர் விஜயகாந்த்" என்றார்.

click me!