பாகிஸ்தான் தலைவர்கள் பயங்கரவாதத்தை தூண்டிவிடுகிறார்கள்….இது நல்லதுக்கில்ல ! டிரம்பிடம் எச்சரித்த மோடி !!

By Selvanayagam PFirst Published Aug 19, 2019, 9:59 PM IST
Highlights

பாகிஸ்தானில் உள்ள சில தலைவர்கள் வன்முறையையும், பயங்கரவாதத்தையும் தூண்டிவிடுவதாகவும், இது அமைதிக்கு உகந்தது அல்ல என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

காஷ்மீர் பிர்ச்சனை தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். இதை இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இந்த எதிர்ப்பின் காரணமாக டிரம்பிள் யோசனையை மோடி நிராகரித்தார்.

இதைத் தொடர்ந்து திடீரென காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது பிரிவு சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் ஐ.நா.அவையிலும் புகார் அளித்தது. ஆனால் இதற்கு சீனாவைத் தவிர யாரும் ஆதரவு அளிக்க முன்வரவில்லை.

இது தொடர்பாக கடந்த வாரம்  அமெரிக்க அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைபேசியில் பேசினார். 

இந்நிலையில் பிரதமர் மோடி, அமெரிக்கர் அதிபர் டிரம்ப்புடன் இன்று தொலைபேசியில் பேசினார். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த பேச்சு வார்த்தையில்  இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானில் உள்ள சில தலைவர்கள் வன்முறையையும், பயங்கரவாதத்தையும் தூண்டிவிடுகின்றனர். இது அமைதிக்கு உகந்தது அல்ல தெரிவித்தார்.

மேலும் இதனை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும், இரு தரப்பு வர்த்தகம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். பயங்கரவாதம் மற்றும் வறுமையை அகற்றுவது இதில் ஒன்றிணைந்து பயணிப்போம் இவ்வாறு பிரதமர் மோடி டிரம்ப்பிடம் பேசியுள்ளார்.

click me!