வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்… முதலமைச்சர் எடியூரப்பாவுடன் கரம் கோர்ப்போம் ! கம்பெனிகளுக்கு ராஜீவ் சந்திரசேகர் அழைப்பு !

By Selvanayagam PFirst Published Aug 19, 2019, 7:29 PM IST
Highlights

ர்நாடகா மாநிலம் முழுவதும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அம்மாநிலத்தில் உள்ள நிறுவனங்கள் உதவி செய்திட வேண்டும் என முதலமைச்சர் எடியூரப்பா சார்பில் கேட்டுக் கொள்வதாக பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

கடந்த 3 வாரங்களாக கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் முக்கிய அணைகளான ஹேமாவதி, கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.

இந்த கனமழை வெள்ளத்தால் குடகு உள்ளிட்ட மலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு போன்றவைகளால் 54 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கடும் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாக மாநில மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி கொடுத்து  உதவ வேண்டும் என முதலமைச்சர் எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள பாஜக எம்.பி. ராஜீவ் சந்திரசேகர், கர்நாடகா முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிறுவனங்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணத்தை அள்ளி வழங்க வேண்டும் என எடியூரப்பா சார்பில் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் மறு சீரமைப்புக்காக முதலமைச்சர் எடியூரப்பாவுடன் கர்நாடக மாநில நிறுவனங்கள் கைகோர்க்க வேண்டும் எனவும் ராஜீவ் சந்திர சேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால் தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் ராஜீவ் சந்திர சேகர் வலியுறுத்தியுள்ளார்

click me!