எப்படியிருந்த செந்தில் பாலாஜிய இப்படி ஆக்கிட்டாங்களே!! உருக்கமாக கலங்கும் அம்மா விசுவாசிகள்...

By sathish kFirst Published Mar 5, 2019, 10:33 AM IST
Highlights

இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியில், அம்மா அமைச்சரவையில் அமைச்சராக இருந்துவிட்டு இப்படி, அரசியலில் அடியெடுத்து வைக்காத, மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியாக உருவாகும் உதயநிதி செல்லும் வாகனத்தில் இப்படியா தொங்கிக்கொண்டு செல்வது? என அதிமுக தொண்டர்கள் கலங்கிப்போயிருக்கிறார்களாம்.

இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியில், அம்மா அமைச்சரவையில் அமைச்சராக இருந்துவிட்டு இப்படி, அரசியலில் அடியெடுத்து வைக்காத, மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியாக உருவாகும் உதயநிதி செல்லும் வாகனத்தில் இப்படியா தொங்கிக்கொண்டு செல்வது? என அதிமுக தொண்டர்கள் கலங்கிப்போயிருக்கிறார்களாம்.

அமமுக தினகரனுக்கு அல்வா கொடுத்துவிட்டு அப்படியே தனது படையோடு  திமுகவில் ஐக்கியமானார் செந்தில் பாலாஜி. அடுத்த பதினைந்தே நாட்களில் கரூரில் பிரமாண்ட மாநாடு நடத்தி ஸ்டாலினையே மிரள வைத்தார். அடுத்த 40 நாட்களில் திமுகவின் கரூர் மாவட்டப் முக்கிய புள்ளியான நன்னியூர் ராஜேந்திரன் பதவியை வாங்கி கரூர் திமுகவின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டார் செந்தில்பாலாஜி.

2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 2016இல் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார். 2011இல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தபோது போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.

அதிமுகவிலும் சரி, தனியாக பிரிந்து வந்து தொடங்கப்பட்ட அமமுகவிலும் தினகரன் பெரிதாய் நம்பிக்கை வைத்தவர்களில் முக்கியமானவர் செந்தில்பாலாஜி. அதுமட்டுமல்ல செந்தில் பாலாஜி என்னுடைய கம்பியூட்டர் என சொல்லும் அளவிற்கு திறமை சாலி, இளைஞர் என்றாலும் கூட மிக தேர்ந்த அரசியல்வாதி அவர்.

ஜெயலலிதா இருந்த போது சில மூத்த மந்திரிகளுக்கு சிக்கல் வந்தபோது மிக சாதுர்யமாக அதை தீர்த்து வைத்தது செந்தில்தான். அதுமட்டுமல்ல, சைலண்ட்டாக வாயே திறக்காமல் வேலையை முடிப்பார். அப்படிப்பட்ட செந்தில் பாலாஜி  கடைசியாக இப்படி மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியான உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுக்கூட்டங்களில் பேச செல்லும் வாகனத்தில் தொங்கிக்கொண்டு போவதைப் பார்த்த அதிமுக அம்முகவினர் கலங்கிப்போயுள்ளார்களாம்.

ஒரு பெரிய கட்சியில எல்லாருக்கும் சின்னச் சின்ன விட்டுக் கொடுத்தல்கள் இருக்கும்,  முக்கியத்துவம்  குறையும் நேரத்திலும், பதவிக்காகவும், கட்சியை விட்டு போனால் இப்படித்தான் நடத்துவார்கள் என இரண்டு கட்சியில் உள்ள தொண்டர்களும் செந்தில்பாலாஜிக்கு அட்வைஸ் பண்ணுகிறார்களாம்.

click me!