அக்கா-தம்பியா? டெய்சி சரண்-திருச்சி சூர்யா ஆடியோ விவகாரத்தில் அதிரடி திருப்பம்!!

Published : Nov 24, 2022, 08:59 PM IST
அக்கா-தம்பியா? டெய்சி சரண்-திருச்சி சூர்யா ஆடியோ விவகாரத்தில் அதிரடி திருப்பம்!!

சுருக்கம்

திருச்சி சூர்யா எனக்கு தம்பி போன்றவர் என்று பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரண் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சூர்யா எனக்கு தம்பி போன்றவர் என்று பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரண் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பல்வேறு காரணங்களால் திமுகவை விட்டு விலகிய திருச்சி சூர்யா பாஜகவில் இணைந்ததை அடுத்து அவருக்கு பாஜகவில் ஓபிசி பிரிவு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இதனிடையே பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணும் திருச்சி சூர்யாவும் தொலைப்பேசியில் பேசும் போது, திருச்சி சூர்யா டெய்சியை ஆபாசமாக பேசியிருந்தார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காயத்ரி ரகுராம் வலியுறுத்தினார்.  ஆனால் காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் ஆபாசமாக பேசிய திருச்சி சூர்யாவை கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்ததோடு இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் திருச்சி சூர்யா டெய்ஸி விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்றது.

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்..! ஒழுங்கு நடவடிக்கை குழு அதிரடி அறிவிப்பு

இந்த விசாரணை குறித்த அறிக்கை தமிழக பாஜக தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு பின்னர் டெய்சி சரண் மற்றும் திருச்சி சூர்யா ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டெய்சி சரண், பாஜகவின் சித்தார்த்தங்களால் ஈர்க்கப்பட்டு பாஜக கட்சியில் இருவரும் சேர்ந்தோம். கண் பட்ட நிகழ்வு போல ஒரு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விட்டது. திருச்சி சூர்யா சிவா எனக்கு தம்பி போன்றவர். அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வார்த்தைகள் அரசியல் காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து விட்டது. மாநில தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி கட்சியின் மூத்த தலைவர்கள் கனகசபாபதி மற்றும் மலர்க்கொடி முன்னிலையில் இரு தரப்பும் பரஸ்பரம் சுமூகமாக பிரச்சனையை முடித்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளோம். இருவரும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளோம் என்றார். அதை தொடர்ந்து பேசிய திருச்சி சூர்யா, நான் பேசியது தவறு தான்.

இதையும் படிங்க: அரை வேக்காடுத்தனமாக அவசரக்கோலத்தில் கருத்து சொல்லும் ஆளுநர் ரவி..! கே.எஸ். அழகிரி ஆவேசம்

இதற்காக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்பு எழுத்துப்பூர்வமாக என்னுடைய விளக்கத்தை அளித்திருக்கிறேன். என் பேச்சுக்காக கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்கிறேன். செல்போனில் பேசிய தங்கள் இருவரிடமிருந்தும் இந்த ஆடியோ வெளியே செல்லவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டிருக்கிறது. பாஜக மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு களங்கம் விளைவிக்கவே இது தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிற்து. திமுகவில் சைதை சாதிக் மீது காவல்துறையில் புகார் அளித்தும் கூட கட்சி சார்ந்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் பாஜகவோ நடவடிக்கை எடுத்ததோடு ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டது. இப்பிரச்சனையை இதோடு இருவரும் பரஸ்பரம் முடித்துக் கொண்டுவிட்டோம். இருவரது நட்பும் குடும்ப ரீதியாக தொடரும் என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!
என்னையா முடக்க பாக்குறீங்க.. அதுஒருபோதும் நடக்காது.. திமுக அரசை அட்டாக் செய்து விஜய் ட்வீட்!